...
செய்திகள்நுவரெலியா

அதிபர்,ஆசிரியர் வேதன முரண்பாட்டை தீர்க்க கோரி நுவரெலியாவில் போராட்டம் 

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று (09) திகதி பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர்  நுவரெலியா பிரதான தாபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுப்படனர்.


சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .

ஆர்பாட்டத்தின் போது சம்பள உயர்வை கேட்கவில்லை  எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள  முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு உட்பட பல கோசங்களை ஆசிரியர்கள் எழுப்பினர்.

குறித்த ஆர்பாட்டமானது நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டு லோசன் வீதி ஊடாக சென்று மீண்டும் நுவரெலியா பொது பேருந்து தரிப்பிடத்திற்கு வந்தடைந்தது.டி. சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen