விளையாட்டு

6000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்தார் திமுத் கருணாரத்ன.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்தார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம், காலி சர்வதேச மைதானத்தில் இன்று இடம்பெறுகிறது. 

இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடி வருகிறது.

Related Articles

Back to top button