சினிமா

61 வயதைத் தொட்டார் மோகன்லால்… பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேட்டா….!

மோகன்லால் விஸ்வநாதன் ஐயர் என்ற நடிகர் மோகன்லாலின் பிறந்த நாள் இன்று. 1960 ம் ஆண்டில் பிறந்த மோகன்லால் இன்று தனது 61 வது வயதைத் தொட்டிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இதுவரை சுமார் 300 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவற்றில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களும் அடக்கம். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர். 1978ம் ஆண்டு திரையோட்டினம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானாலும் சிலபல காரணங்களால் அந்த படம் வெளிவாராமல் போய்விட்டது. எனவே இவரது அடுத்தப் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் தான் ஒரு ஹீரோவாக இவரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மாபெரும் வெற்றி பெற்று, மலையாள திரையுலகில் மோகன்லாலுக்கு முக்கிய இடத்தை அளித்தது.

1986ஆம் ஆண்டு “டி.பி. பாலகோபாலன்,எம்.ஏ” என்ற திரைப்படம் அவருக்கு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன் முதலாக பெற்றுத் தந்தது. 1990ஆம் ஆண்டு வெளியான “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” திரைப்படம் மோகன்லாலுக்கு பெரும் புகழை வாரியளித்தது.

கேரளாவில் 2007ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மதுதயாரிப்பு நிறுவனத்திற்கான விளம்பரங்களில் நடித்ததற்காக சர்ச்சைக்குள்ளான மோகன்லால், தனது திரைப்பட பங்களிப்புக்காக 5 முறை தேசிய விருது, ஒன்பது முறை கேரளா அரசின் விருது, பத்து முறை பிலிம்பெர் விருது பெற்றவர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com