மலையகம்

கொத்மலை லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு

நுவரெலியா – கொத்மலை லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைப்பெற்றுள்ளதுடன், புதிய கட்டடத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் திறந்து வைத்துள்ளார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசோக ஏரத் மற்றும். கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கட்டடம் 27 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசோக ஏரத் மற்றும். கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் .

பிராந்திய செய்தியாளர் : மோகன்

Related Articles

70 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button