ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை தம்பேதன லிப்டன் சிட் சுற்றுலாப் பகுதிக்கு சுற்றுலா வந்த மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றதோடு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களை தம்பேதன முச்சக்கர வண்டி சாரதிகளால் பங்கட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களுள் 8 பெண்களும் 10 ஆண்களும் இரண்டு சிறுவர்களுமாக மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா