மலையகம்
தாவரவியல் பூங்காவின் நடத்துனர்களுக்கு எதிராக ஹக்கல பூங்காவிற்கு அருகில் 42 கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

தாவரவியல் பூங்காவின் நடத்துனர்களுக்கு எதிராக ஹக்கல பூங்காவிற்கு அருகில் வியாபாரம் செய்து வரும் 42 கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பூங்காவை பார்வையிட இன்று காலை வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகள் அசௌகரிகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் இவர்களை பூங்காவுக்குள் விடாது ஆர்பாட்டகார்ர்கள் நுழைவாயிலை மூடி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடைகளின் உரிமையாளின் வியாபாரங்களை பாதிக்ககூடியதாக பூங்கா நிர்வாகம் தான்தோன்றித்தனமாக தனமாக செயல்படுவதை கண்டித்தே ஆர்ப்பாட்டத்தில் பிரதேச வாதிகளும் வியாபாரிகளும் ஈடுபடுகின்றனர்.