உலகம்

70 வயதுக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் இருக்குமாறு பிரித்தானியா உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சத்தினால் 70 வயதுக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் இருக்குமாறு உத்தரவிடுவதற்கு பிரித்தானியா தயராகியுள்ளது.

இதனடிப்படையில் வயோதிபர்கள், நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே தங்க நேரிடும் என பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹேன்கொக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவாதிருக்கும் வகையில், எதிர்வரும் 15 நாட்களுக்கு தமது எல்லைப்பகுதியை மூடுவதற்கு ஆர்ஜன்டீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

குவாத்தமாலாவில் முதற் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. .

கொவிட் 19 தொற்றினால் நியூஸிலாந்தில் வர்த்தக துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் இன்று முதல் அனைத்து பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்று வேகமாக பரவும் அச்சத்தினால், வர்த்தக நிலையங்களை மூடி இல்லங்களில் இருக்குமாறு வெனிசூவேலா ஜனாதிபதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button