செய்திகள்

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வு-விசேட போக்குவரத்து ..

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வு காரணமாக இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம் கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டார் திசையில் பிரவேசப்பதற்கும் நூலகச் சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸ் திசையில் பிரவேசிப்பதற்கும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

தர்மபால மாவத்தையின் எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தையில் நுழைதல், சொய்சா சுற்றுவட்டத்திலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு நுழைதல், விஜேராம மாவத்தையில் ரொஸ்மிட் பிளேஸ் மூலம் கன்னங்கர மாவத்தைக்கு பிரவேசிப்பதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒத்திகை வேளையில் பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மெயிட்லன்ட் பிளேஸ் மற்றும் பிரேமகீர்த்தி அல்விஸ் மாவத்தைக்கு நுழைதலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையின் இலங்கை மன்ற வீதிக்கு நுழைவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download