செய்திகள்

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து..?

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 31,மற்றும் அடுத்த மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தினங்களில் காலை ஆறு மணித் தொடக்கம் பகல் 01 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button