செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : 720 மில்லியன் ரூபா வழங்க காப்புறுதி நிறுவனம் இணக்கம்

எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் மீன்பிடித்துறை பாதிப்புக்கு இடைக்கால இழப்பீடாக 720 மில்லியன் ரூபா வழங்க காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சற்றுமுன்னர் தெரிவித்தார்.

குறித்த இழப்பீட்டுத் தொகை திறைசேரி திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று இன்று தென் கடற்பிராந்தியத்தில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது. மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கு குறித்த குழு தென் கடற்பிராந்தியத்திற்கு பயணிக்கவுள்ளது.

Related Articles

Back to top button