
இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாமலை நேற்று மாலை அப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தார்.
பொன்னாடை போற்றி மாலை அணிவித்து உற்சாகத்துடன் அண்ணாமலை அவர்களை வரவேற்ற மை குறிப்பிடத்தக்கது. இதன்போது குத்துவிளக்கேற்றிய பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
குறித்த வீட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சௌமியமூர்த்தி தொண்டமான் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதற்கு மரியாதை செலுத்திய பின்னர் அந்த உருவப்படங்கள் தமக்கு வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
குறித்த நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட பிரதேச சபை மற்றும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா