நீர் விநியோகிக்க பயன்படும் இயந்திரம், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர்கள்
ஆகியவற்றை திருடிய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பசறை மீதம்பிட்டிய பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் திருடப்பட்ட பொருட்களை ஒளித்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய, குறித்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீதம்பிட்டிய பகுதியை சேர்ந்த 28, 25, 21 ஆகிய வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்னவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் SI ரத்நாயக்கவின் வழிகாட்டலில், சமில் (PC68588), சமன் (PS 63811), நிரஞ்சன் (39315) ஆகியோர் அடங்கிய குழுவினால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவாகியுள்ள நபரை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ராமு தனராஜா