செய்திகள்

8ம் திகதி பசில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்.!

பசில் ராஜபக்ஷ எட்டாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்தகெட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை வர்த்தமானி அறிவித்தல் வெளியானால் 8ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்வார் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button