...
உலகம்

8 நாடுகளுக்கான பயணத்தடையை விதித்தது அமெரிக்கா!

வடக்கு அமெரிக்காவில் ‘ஒமிக்ரொன்’ கொரோனா வைரஸ் திரிபு தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  ‘ஒமிக்ரொன்’ கொவிட் திரிபு பரவல் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கனடாவிலும் அந்த திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் எட்டு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்க அமுல்படுத்தவுள்ளது.

அமெரிக்க மக்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமானதென அந்நாட்டு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்காவில் தற்போது முடக்கல் அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேவை ஏற்படின் தடுப்பூசி நிறுவனங்கள் புதிய தடுப்பூசிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen