...
செய்திகள்

8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை!

விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்தில், 8 வயது சிறுவனைக் கத்திரிக்கோலை காண்பித்து மிரட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், 500,000 ரூபா நட்டஈடு மற்றும் 50,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதிபதி நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மடாதிபதியாக பணியாற்றிவந்த 27 வயதுடைய கதிர்காமம் – கோதமிகம  பகுதியைச் சேர்ந்த மதவன் ஆராச்சிகே மகேஷ் மதுஷங்க என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Related Articles

Back to top button


Thubinail image
Screen