கொழும்பில் இன்று(10) சில பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளுக்கான இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுகிறது:
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை,
கடுவெல மாநகர சபை, மஹரகம,கொலன்னாவ நகரசபை, கோட்டே,
பொரலஸ்கமுவ , கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை பிரதேசங்கள்,
இரத்மலானை , கட்டுபெத்த