செய்திகள்

90 ஆயிரம் ரூபா பெறுமதியான சினோர்ஃபாம் திருட்டு : விசாரணைகள் ஆரம்பம்

சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவர் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரமோத எம்.சிறிவர்த்தன, ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த இருவர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திருடப்பட்ட சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்துகளின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாயாகும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்காக காலி குற்றத்தடுப்பு பிரிவின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button