அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு, சுற்றாடல் சுத்தம் ,மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதர பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்தவராம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அக்கரபத்தனை சுகாதார அதிகாரிகள் தமது குழுவோடு மெராயா, மன்றாசி, பசுமலை போன்ற நகரங்களில் தமது மேற் பார்வை பணிகளை மேற்கொண்டார்கள்.
இது தொடர்பில் தெரிவித்த பிரதேச சபை தலைவர் எதிர்காலத்தில் சிறந்த முறையில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நல்ல மாற்றங்களை உருவாக்க கூடிய விடயங்களை செயல்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.