பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது புதல்வரைத் தாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிசார் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் முன்னாள் உபவேந்தரின் உத்தியோகபூர்வ வீட்டை முற்றுகையிட்டு சுமார் 300 மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தை அடுத்து பேராதனைப் பொலிசார் சிலர் அங்கு விஜயம் செய்துள்ளனர். இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில்தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் அங்கு காணப்படவில்லை.
முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்னவின் புதல்வர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.