மலையகம்
98 வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிப்பு

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் ரம்பொட ஹேல்பொட தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 98 வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீட்டுத் திட்டத்திற்காக 118 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பசுமை கிராமம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த அனைத்து வீடுகளுக்கும் அரசாங்கத்தினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.