செய்திகள்

இராஜகிரியவில் தீ.

இராஜகிரியவிலுள்ள தனியார் வங்கியொன்றில் நேற்று பகல் தீ பரவியுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button