கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board வழங்கும் நிகழ்வு இன்று ..

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board ஒன்று இன்று (1/12) வழங்கி வைக்கப்பட்டது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் எம் ஜிஏ பியதாச கலந்துகொண்டார். மலையக மாணவர்களின் கல்வியை மேம் படுத்துமுகமாக அமெரிக்காவில் இருக்கும் செல்லதுரை சிவராம், கனடாவில் இருக்கும் சுப்பையா சிவகுமார் (கியூபெக்) , கனடாவை சேர்ந்த பெரியசாமி பாலேந்திரா (கியூபெக்) ஆகியோரின் நன்கொடையின் கீழ் குறித்த Smart Board வழங்கி வைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . குறித்த Smart Board ஆனது அனுசரணையாளர்களின் தந்தை மார்களின் நினைவாக வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும். சுதர்ஷினி ,மஞ்சுல சமந்த தம்பதியினர், (கொட்டகலை) நிகழ்வை ஒழுங்கு படுத்திருந்தனர். தொலைநிலை கல்விக்கு பெரிதும் பங்களிப்பு வழங்கும் வகையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையை…

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை..

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த அருளையா ஜனகராசா (வயது- 60) என்ற வயோதிபரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு 20 சதவீதமாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என…

மேலும் வாசிக்க

ஹோல்புறூக் கோட்ட பாடசாலைகளின் நலன் கருதி டுப்ளோ இயந்திரம் அன்பளிப்பு..

மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் (Zonal) 2,3 ஆகியவற்றுக்கான டுப்ளோ(Duplo) இயந்திரமொன்று இன்று கனடாவில் வசிக்கும் பெரியசாமி பாலேந்திரா அவர்களின் நன்கொடையின் கீழ் இன்று(1/12) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பில் ,பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரிய அன்பளிப்பாக இதனை கருதுவதாக ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஜெயராம் தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நுவரெலிய வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச கலந்து கொண்டதுடன் அனுசரணையாளர்களாக மஞ்சுள சுமந்த சில்வா மற்றும் சுதர்ஷினி மஞ்சுள ஆகியோரும், கோட்ட கல்வி பணிப்பாளர்களான எஸ்.ஜெகதீஸ்வரன் மற்றும் ஏ.ஹரிச்சந்திரன் அபிவிருத்தி கல்வி பணிப்பாளர் எம்.கனேஸ்ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சங்கீதா

மேலும் வாசிக்க

நானுஒயா உடரதலை பாடசாலையில் மாணவன் யோகராஜ் நலிசான் புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

நானுஒயா உடரதலை பாடசாலையில் கல்வி பயிலும் யோகராஜ் நலிசான் வெளிவந்த புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.படத்தில் மாணவனோடு அதிபர் – போல்ராஜ் வகுப்பு ஆசிரியர் – வின்மதிராஜ். டி சந்ரு

மேலும் வாசிக்க

நானுஒயா உடரதலை பாடசாலையில் மாணவன் யோகராஜ் நலிசான் புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

நானுஒயா உடரதலை பாடசாலையில் கல்வி பயிலும் யோகராஜ் நலிசான் வெளிவந்த புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.படத்தில் மாணவனோடு அதிபர் – போல்ராஜ் வகுப்பு ஆசிரியர் – வின்மதிராஜ். டி சந்ரு

மேலும் வாசிக்க

கொரோனாவினால் மரணித்தவர்களின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு..

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

சாதாரண தரப்பரீட்சைகளை திட்டமிடப்பட்ட தினத்தில் நடத்த முடியாது.?

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைகளை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தினத்தில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (01) உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார். எனினும், சுமார் 6 வாரங்களுக்கு முன்னதாக, பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தற்போதைய நிலையில், மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு விரைவில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க

நானுஓயா-வங்கி ஓயாதோட்டத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று..

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வங்கி ஓயாதோட்டத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த நிலையில் கடந்த 27ம் திகதி தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட யுவதியோடு தொடர்பை பேணிய 21 வயது டைய யுவதிக்கேஇவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டீ .சந்ரு

மேலும் வாசிக்க

கொவிட் 19 – பாதுகாப்பதற்கான விழிப்பணர்வு கையடுகள் வழங்கி வைப்பு..

கொவிட் 19 இலரூந்து பாதுகாப்பதற்கான விழிப்பணர்வு கையடுகள் வழங்கி வைப்பு மலையக சமூக அபிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி உதவியுடன் கொரோனா தொற்றிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புனர்வு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டுதோடு மாணவர்கள் மற்றும் மக்களை பாதுகாப்பதற்கான தெளிவூட்டும் நிகழ்வும் நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நேற்று (30/11) நடைபெற்றது.

மேலும் வாசிக்க

மஹர சிறைச்சாலை சம்பவம் CID விசாரணைகள் ஆரம்பம்…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (01) விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்கிய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அமைதியின்மையில் உயிரிழந்த கைதிகளின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார் . சடலங்கள் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்ததுடன் .காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

மேலும் வாசிக்க