HR FOUNDATION உடன் இணைந்து மோட்சம் அமைப்பு முன்னெடுத்த மற்றுமொரு மனிதநேய பணி.

கொரோனா தொற்றினால் நீண்டகாலம் முடக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கொழும்பு -15 மட்டக்குளி பகுதியில் வசிப்போருக்கான உலர் உணவுப் பொருட்கள் (24/01/2021) வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் HR FOUNDATION அமைப்பின் தலைவரும், கொலன்னாவ மஸ்ஜித் பெடரேஷனின் தவிசாளருமான திரு பெரோஷ் மொஹமட், கொலன்னாவ மஸ்ஜித் பெடரேஷனின் உதவி செயலாளர் மொஹமட் ஹில்ஹாம், வெல்லம்பிட்டிய மஸ்ஜித்தின் தவிசாளர் மொஹமட் மொஹைதீன், HR FOUNDATION அமைப்பின் உறுப்பினர் அல்-ஹாஜ் ராபீக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மோட்சம் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அமைப்பின் ஏனைய கௌரவ உறுப்பினர்களும் நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். கொரோனா காலப்பகுதியில் கொழும்பு -15 மட்டக்குளி ஶ்ரீ கல்யாணி கங்காராம பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு மோட்சம் அமைப்பினரால் மூன்றாவது முறையாக HR FOUNDATION உடன் இணைந்து இம்முறை உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைத்தமை…

மேலும் வாசிக்க

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம்.

கிராமத்துடன் கலந்துரையாடல், செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களை ஒன்றினைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சித்திட்டம் இன்று 475A குடஓயா மற்றும் 475M ஸ்டோனி கிளிப் ஆகிய கிராம சேவகர் பிரிவில் நடைப்பெற்றது. பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற விடயங்களை குறிப்பிட்டு கலந்துரையாடுவதன் மூலமாக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். இந்த கலந்துரையாடலில் மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் போது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் சபையின் உறுப்பினர்களான பாலசுப்பிரமணியம், லெட்சுமணன். கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துக்கொண்டார்கள்.

மேலும் வாசிக்க

கொரோனா சிகிச்சை மையத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வு.

எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் சகோதர இன பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த சிறுமியின் தாய் தாதி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன்,அந்த தாதி ஏனைய தாதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வை நடத்தியாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

உலக மட்டத்தில் சாதனை படைத்த இலங்கை மாணவி.

காலியிருந்து சுக்ரா சம்சுதீன் என்ற மாணவி பிரித்தானிய நாட்டில் சான்றிதழ் பெற்ற கணக்கியலாளர சங்கமான ACCA நிறுவனத்தால் உலக மட்டத்தில் நடாத்தப்பட்ட advance performance management பாடத்தில் தோற்றிய உலக மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மலையகம்.lk சார்பாக அம்மாணவிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் வாசிக்க

கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்கள் கைது தொடர்பில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி கண்டிப்பு.

நுவரெலியா கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமையை புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த பலவருடங்களாக பாக் தோட்டத்தில் சர்வாதிகாரி போல் செயற்பட்டு வரும் தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு தொழிலாளர்கள் போராடி வருகின்றார்கள். ஆனால் கம்பனி நிர்வாகம் தொழிலாளர்களை நசுக்கி தனக்கு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து தரும் தோட்ட அதிகாரிக்கு சார்பாகவே நடந்து வருகின்றது. மேற்படி தோட்ட அதிகாரி தொழில் ரிதியாக தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்து வருவது மாத்திரமல்லாமல் தோட்ட மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் தடுத்து வந்துள்ளார். பல தடவைகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் தனது அராஐகத்துக்கு அடிபணியாத தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரை தூண்டி பொய் குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறையில் அடைக்க செய்துள்ளார் இவ்வாறு சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் தோட்ட அதிகாரி…

மேலும் வாசிக்க

இந்திய மீனவர்களின் மரணம் குறித்து டக்லஸ் தேவானந்தா அறிக்கை.

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதுஇலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்டைய எதிர்பார்ப்பாகும். இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன். வலியுத்தியதுடன்…

மேலும் வாசிக்க

வலப்பனை மற்றும் மடுல்சீமை பிரதேசங்களில் இன்று காலை நிலஅதிர்வு.

பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய கிராமத்தில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கைள விட சற்று பலம்வாய்ந்ததாக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 தொடக்கம் 4 மணிவரையில் மூன்று தடவை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சுமார் மூன்று செக்கன்களுக்கு உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் அச்சமடைந்திருக்கின்றனர். இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திலும் இன்று அதிகாலை 3.29 மணியளவில், ரிச்டர் அளவு கோளில் 1.8 ரிச்டராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் வாசிக்க

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற கோர பஸ் விபத்து.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்ப்பாணம் -ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (21) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ் வந்தவேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது. இந்நிலையில் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவரின் தலையில் கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சேவிர்ஸ் நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார்…

மேலும் வாசிக்க

இந்தியாவில் தடுப்பு மருந்து நிறுவனத்தில் பாரிய தீ விபத்து.

இந்தியாவில் கோவிஷீல்டு கொரானா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து சற்று முன் 4.15 மணியளவில் ஏற்பட்டது. ஒக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி துவங்கிவிட்டதால் மருந்து தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புனேயில் உள்ள சீரம் Serum Institute நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். தீ விபத்தால், சீரம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ…

மேலும் வாசிக்க

வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் சந்தையில் இனங்காணப்பட்டதையடுத்து வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க