முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை!

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கு, முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை

மேலும் வாசிக்க

அவிசாவளையில் கண்டுபிடிக்கப்பட்ட 22கிலோ எடையுள்ள இரத்தினக்கல்.

அவிசாவளை – தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரியவகையான இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த அரிய இரத்தினக்கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணிக்கம் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படிக இரத்தினத்தின் வணிக மதிப்பு தொடர்ந்து மதிப்பிடப்படுவதாக தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவிய கண்காட்சி போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கருத்தோவிய கண்காட்சி போராட்டம் இன்று யாழில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

கொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொஸ்கொட காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பிரிட்டனில் பரவும் வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம்.

பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி : தினக்குரல்

மேலும் வாசிக்க

மேலும் 4 மரணங்கள்; 584 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் இன்று மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது. 2 ஆண்கள், 2 பெண்கள் ஆவர். வயதுகள் முறையே 82, 47, 84, 65 ஆகும். இடங்கள்: கொழும்பு 13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டி;இலங்கையில் இதுவரை மொத்தமாக 244 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளது. இதேவேளை இன்று புதிய தொற்றாளர்களாக 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் முஹம்மத் அரிஃபுல் இஸ்லாம், தனது தகுதிச் சான்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று (11) திங்கட்கிழமை கையளித்தார். கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இதனை சமர்ப்பித்தார்.இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக பதவியுயர் பெற்ற ரியாஸ் ஹமீதுல்லா, நெதர்லாந்து உயர் ஸ்தானிகராக பதவியுயர்வு பெற்று சென்றுள்ளார். இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பங்களாதேஷ் குடியரசு அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பொலிஸாரால் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கொழும்பு விஜேராம பகுதியில் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் சில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு விஜேராம பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன்போது, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முயற்சித்தபோது, அனுமதியின்றி அதற்கு இடமளிக்க முடியாது என பொலிஸார் அந்தத் தருணத்தில் உத்தரவிட்டனர். அதன் பின்னர் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான்கு மாணவர் பிரநிதிகளுக்கு…

மேலும் வாசிக்க

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கிராம சேவையாளர் பிரிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வரை முடக்கப்பட்டிருக்கும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மகேந்திரன் தெரிவித்தார். இதற்கமைய, A9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெலுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று இதுவரை 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 302 பேர், சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 08 பேர் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 6,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மவுசாகலை தோட்ட சீர்பாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய நபரைக் காணவில்லை.

கடந்த 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை தோட்ட சீர்பாத பிரிவை சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மனி என்பவர் காணமல் போய் உள்ளதாக அவரது சகோதரன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இப்பெண்மணி எங்கு காணப்பட்டாலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அல்லது052-2277222, 071-8230023, 075-5590000 என்ற தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் வாசிக்க