Author: Thana
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-
தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்- லவர்ஸ்லீப் தோட்டத்தில் தங்களுக்கென வழங்கப்பட்ட காணிப் பகுதியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள். மன்னர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு இலங்கைக்கு வந்து குடியேறினார்களோ, அதேபோன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையாக அழைத்து வரப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர். …
மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி அலுவலக ரயில் ( கங்கொட மற்றும் கடிகமுவ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (05) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் கற்கள் சரிந்து விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்போது கடுமையாகத் தாமதமடைந்துள்ளன. ’டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப் பெற்ற முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக கருத்துத் தெரிவிக்கையில், “ரயில் பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனை அவதானித்தபோது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. அதிவேகத்தில் மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி…
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி கத்தோலிக்க குருவானவர் பரிதாபமாக உயிரிழப்பு! சடலம் லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைப்பு; தலவாக்கலை பொலிஸார் தீவிர விசாரணை. தலவாக்கலை – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கலுக்கு இலக்காகி நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 50 வயதுடைய கத்தோலிக்க மதகுரு ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இடி-மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த போதிலும், உடனடியாக மீட்ட பொதுமக்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சடலம் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை
மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபருக்கு எதிராக “S3-ICCPR” சட்டத்தின் கீழ், ஜீவன் தொண்டமான் பொலிஸ் முறைப்பாடு! மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (02) பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் “Tell IGP – Sri Lanka Police” முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் அளித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதற்கான குறிப்பு இலக்கத்தையும் (Reference Number) அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜீவன் தொண்டமான் பின்வருமாறு விடயங்களை முன்வைத்து முறைப்பாடு செய்துள்ளார்… குறித்த நபரால் முகநூலில் (Facebook) பகிரப்பட்டுள்ள ஒரு…
ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுத் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக அபேகுணசேகரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, யாழ்ப்பாண நகர்ப் பகுதி சந்தை வளாகத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக யாழ்ப்பாணப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஆரம்பத்தில் காலி பகுதிக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்ததுடன், பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரை…
பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!
மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய சேவையொன்றை அறிமுகப்படுத்த ‘லங்கா மெற்றோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரியான சஞ்சய தயாரத்ன என்பவரின் கூற்றுப்படி, வார இறுதி நாட்களில் பல பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதால், வழக்கமான பயணிகளின் தேவை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மெட்ரோ பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதையே இந்த யோசனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் தற்போது திட்டமிடல் கட்டத்தில் உள்ளதாகவும், மெட்ரோ பேருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இதனை அறிமுகப்படுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதற்கமைய, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆர்வமுள்ள நபர்கள் நியமிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து…
கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு! கொழும்பிலிருந்து இன்று ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில், குடிபோதையில் பயணித்த இருவர் இரு பெண்களுக்கு இடையூறு விளைவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இது குறித்து பேருந்து நடத்துனரிடம் முறையிட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஊழியர்கள், வட்டவளை பொலிஸ் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, தகராறில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்து மீண்டும் ஹட்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்தனர். நீண்ட தூரப் பயணங்களின் போது இதுபோன்ற அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, மது அருந்தியவர்களைப் பேருந்துகளுக்குள் அனுமதிக்கக் கூடாது எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராகுல்
இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்த மலையக மார்க்க ரயில் சேவைகள், சுமார் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ சூறாவளி காரணமாக மலையக மார்க்க ரயில் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 10 மாதங்களுக்குப் பிறகு இந்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.