Author: Thana

இஸ்ரேல் யுத்த தாங்கி அழிப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. 6G தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீற்றர் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசாங்கத்திற்கு சொந்தமான ரபாயல் உயர் பாதுகாப்பு நிறுவனம் புதிய ஏவுகணையை தயாரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்து குறித்த ஏவுகணையை இயக்கக்கூடிய திறனும் காணப்படுவதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுச்சீட்டுகளை மாத்திரம் வழங்கியது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 2,500 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேர் திருப்பி அனுப்ப படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றமையே இந்த நிலைக்குக் காரணம். இதனால் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலை 6.15 க்கு ஆரம்பித்து இரவு…

Read More

சுகாதார துறைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது 450 மில்லியன் ரூபா அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம், பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கக்கூடிய குழுக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். வருடாந்தம் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எனவே இன்னும் இரண்டு வருடங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான அளவு பணம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளுக்கான கோரிக்கை வழங்கிய பின்னர், மருந்துகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு வழங்குவதற்கு சிறிது காலம் ஆகலாம். இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மருந்துப் பொருட்கள் குறித்து சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார் அந்த காலத்திற்குப் பிறகு மருந்துப் பொருட்கள் குறித்து நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன், பற்றாக்குறையாக…

Read More

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யுக்ரேன் சிறைக்கைதிகள் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மரியூபோல் நகரிலிருந்து குறித்த கைதிகள் ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய சட்ட அமுலாக்க பிரிவை மேற்கோள்காட்டி டாஸ் எனும் செய்தி முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே சிறை கைதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Read More

கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ் சமத்திர, வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவு மற்றும் உலக வங்கியின் உலகளாவிய போக்குவரத்து நடவடிக்கை ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படும் CPPI அல்லது கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் 2021 இந்தத் தரவுகள் பதியப்பட்டுள்ளன. இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரசாந்த ஜயமான்ன தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகமானது 2021 ஆம் ஆண்டில் 7.25 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் காட்டியுள்ளது மற்றும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2% மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில்,ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14 ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடால் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக 11 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் விவசாயிகள் பெற்ற சிறு, சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சிறிய நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும் நிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் 100 வீதம் தள்ளுபடி செய்யப்படும் என” பிரதமர் கூறினார்.

Read More

இன்று (06) முதல் 12 ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இந்த மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு https://www.scribd.com/document/577003700/Demand-Managmet-Schedule-06th-to-11th-June-2022#from_embed

Read More

எரிவாயு விலை மறுசீரமைப்பு தொடர்பான சமூக ஊடக செய்திகள் பொய்யானவை என LITRO Gas Lanka Limited தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை (8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More