Author: Thana

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ…

Read More

மேல் மாகாணத்தில் இன்று (15) தொடக்கம் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் உள்ள 83 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆகக்கூடுதலாக டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் 18 சுகாதார உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை (10) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. வருடாந்தம் ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு கண்ணகை அம்மன் ஆலத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன. சிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார்களால் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களைக் கொண்டு சடங்குகள் இடம்பெற்றன. இம்முறை அது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

Read More

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை, பைடன் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக அடுத்த மாதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதி மற்றும் சவூதி அரேபியா ஆகிய இடங்கள் அவரது பயணத்திட்டத்தில் காணப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கமைய ஜுலை மாதம் 13ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் சவூதி அரேபியாவுடன் காணப்படும் முரண்பாடுகளையடுத்து அங்கு விஜயம் மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வெள்ளை மாளிகை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Read More

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, அடுத்த வருடத்திலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது இந்த சுற்று நிருபத்திற்கு அமைய இடம்பெறும். பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்காகவே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. பாடசாலைககளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2023 பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு…

Read More

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா Influenza நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார். சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது.இதனால் சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பாக வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் டாக்டர் தீபால் பெரேரா கூறினார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு இயற்கை திரவங்கள், பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால் குளிசை வழங்கலாம் என்று தெரிவித்த அவர் இவ்வாறானவர்களுக்கு ஓய்வும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

Read More

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர். கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் இம்மாதம் (ஜூன்) 8 முதல் 11 வரை நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவின் 2வது லெப்டினன்ட் எச்.டி.ஏ.பீரிஸ் 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியை 26.24 வினாடிகளில் முடித்து ஒரு புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதேவேளை 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களுடன் 2 (V) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியள் படையணியின் பிரைவேட் ஆர். ஜி. ஏ.கருணாநாயக்க சிறந்த ஆண்கள் திறந்த நீச்சல் வீரருக்கான பட்டத்தை வென்றார் என இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவ அணி, ஆண்கள் பிரிவில் 16 தங்கம், 13 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும், இராணுவப் பெண் நீச்சல்…

Read More

பாடசாலைகளுக்கும் விடுமுறை இன்றைய (13) தினம் விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் மற்றும் மின்சாரத் துண்டிப்புப்போன்ற பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துளளது. இருப்பினும் இந்த விடுமுறை அரச அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் சகல பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று(13) விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read More

நாடாளாவிய ரீதியில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 700 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், தேசிய பாடசாலைகள் என்பவற்றில் வெற்றிடங்கள் இதற்கமைவாக பூரணப்படுத்தப்பவுள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மூன்று வாரங்களில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More