மஸ்கெலியா-சாமிமலை பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு.

மஸ்கெலியா-சாமிமலை பிரவ்ன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் காட்மோர் கல்கந்தை பிரதேசத்தை சேர்ந்த 26வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தனியார் பேருந்தொன்றிற்கு இடம் கொடுக்க முற்படுகையில் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றுறுதி.

மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களிற்கு பிரவேசிக்கும் நபர்களிற்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்று முன்தினம் சுமார் 504 நபர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

பலாங்கொடை கல்வி வலய காரியாலயத்தில் அக்கில சாலிய எல்லாவள தலைமையில் இடம்பெற்ற சந்திப்பு.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் மற்றும் இரத்தினபுரி பொருளாதார அபிவிருத்தி குழுவின் தலைவர் அக்கில சாலிய எல்லாவள தலைமையில் பலாங்கொடை கல்வி வலய காரியாலயத்தில் (13/1) சந்திப்பொன்று இடம்பெற்றது.இதன் போது பலாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளின் அதிபர்கள் பங்குகொண்டு பாடசாலையில் உள்ள குறை நிறைகள் முன்வைக்கப்பட்டது. சில குறைப்பாடுகளுக்கான தீர்வு உடன் வழங்கப்பட்டதோடு சில குறைப்பாடுகளை தீர்ப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என கூறியிருந்தார்.மேலும் இந்திய அரசின் அனுசரணையுடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தோட்டத்திற்கும் 25வீடுகள் வீதம் கட்டி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ரஜவக்க சுண்ணாம்புக்கல் இயற்கை நீரூற்று வலையத்தினுள் உட்பிரவேசிக்க தடை.

பலாங்கொடை ரஜவக்க சுண்ணாம்புக்கல் இயற்கை நீரூற்று வலையத்தினுள் அனுமதியின்றி நுழைவோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று பலாங்கொடை வனப்பாதுகாப்பு பிரதம அதிகாரி விஜயரத்ன உபுல் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரதேசத்தில் உல்லாச பொழுதை கழிக்க வரும் சில இளைஞர்கள், மற்றும் குழுவினர்கள் இயற்கை வளங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இப்பகுதிக்குள் மறு அறிவித்தல் வரையில் அனுமதியின்றி யாரும் உள்நுழைய முடியாது என இதன் போது அவர் தெரிவித்துள்ளார் . மொஹமட் அலி

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்ட யாழ் நகர திரையரங்கம்.

கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் இன்று புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. விஜயின் மாஸ்டர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. அதிகாலை முதல் காட்சியை பார்க்க என நேற்று நள்ளிரவு முதல் இரசிகர்கள் யாழ் நகர் பகுதிகளில் குவிந்து, நகரில் உள்ள திரையரங்குகளின் முன்பாக காத்திருந்தனர். அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் பலரும் முண்டியடித்து டிக்கட் கொள்வனவில் ஈடுபட்டனர். இந்நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள திரையரங்கம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

வீடொற்றிற்கு தலா ஆறு இலட்சம் அடிப்படையில் “மிஹிந்து நிவஹன” வீடமைப்பு திட்டம்.

புத்த சாசனத்துக்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக ” மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டத்தின்” திட்ட அறிக்கையை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் தேரர்களுக்கு வழங்கும் வைபவம் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவினால் கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரையில் நடைபெற்றது. அமைச்சர் முதலில் அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று ஷயாமோபாலி வம்சத்தின் அஸ்கிரிய விகாரை பீடத்தின் தலைமை ஆவண அதிகாரி அதி வணக்கத்துக்குரிய டாக்டர். மெதகம தம்மானந்த் தேரரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டம் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு அதன் திட்ட அறிக்கையும் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மல்வத்து மகா விகாரையைப் பார்வையிட்டு, ஷயாமோபாலி வம்சத்தின் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க அதி வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி…

மேலும் வாசிக்க

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய செயலியொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள விடுதிகளை அண்மித்து கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தொற்று உறுதியாகும் பயணிகள் இந்த நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு சிகிச்சை கட்டணங்கள் பயணிகளே செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தங்க வைக்க 131 ஹோட்டல்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் 36 ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் கூடப்படவுள்ள பாராளுமன்ற அமர்வு.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று (13/1) பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு விவாதங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளமையால் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளபடவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசிகளை பெறவிருக்கும் தரப்பினர்.

இராஜகிரியையில் அமைந்துள்ள “சுவசெரிய” நிறுவன ஆம்புலன்ஸ் அலுவலக உத்தியோகத்தர்களே நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் தரப்பினராக தீர்மானிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் மற்றும் கொவிட் கட்டுபாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

நாட்டில் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியேறும் நபர்களிற்கான கொரோனா பரிசோதனைகளை 11இடங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தவும், நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதியில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினர் தலைமையில் மேற்கொள்ளபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க