நானுஓயா-வங்கிஓயா 17 வயதுயுவதிக்கு கொரோனா தொற்று..

டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வங்குஓயா பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் 44 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்குஓயா பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை அழைத்து செல்லவிருக்கும் வைத்தியசாலை தொடர்பான விடயங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வி.சங்கீதா

மேலும் வாசிக்க

நாளை ஆரம்பமாகிறது லங்கா பிரிமியர் லீக்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முனைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. தொடருக்கான அங்குரார்ப்பண வைபவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங், காலி கிளேடியேடர்ஸ்,ஜப்னா ஸ்டேலியன்ஸ்,கண்டி டஸ்கர்ஸ் உள்ளிட்ட ஐந்து அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ், தம்புள்ளை வைகிங் அணியின் தலைவராக குசல் ஜனித் பெரோரான திகழ்கிறார். காலி கிளேடியேடர்ஸ் அணியை சயிட் அப்ரிடி வழிநடத்துவதுடன் ,ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் தலைவராக திஸ்ஸர பெரேரா செயற்படுகிறார். கண்டி அணியை நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா வழிநடத்துகிறார். இதேவேளை ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியில் ஐந்து தமிழ் வீரர்கள் இவ்வருட தொடரில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். அதன்படி கடந்த…

மேலும் வாசிக்க

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதிப்பு இல்லை – திட்டவட்டமாக அறிவிக்கிறார் தினேஸ்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையிலிருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு சர்வதேச ரீதியாக எந்தவொருப் பிரச்சினையும் ஏற்படாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான இன்றைய விவாதத்தில் கலந்துக் கொண்ட போதே வௌிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் நாடு காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இணை அனுசரணை வழங்கியதாவும் தெரிவித்தார். இது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு விடயம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் , இராணுவம் பெற்றுக் கொடுத்த அனைத்து வெற்றிகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாக பதிவானதாகவுகவும் தெரிவித்தார். எனினும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளதுடன் ,இதனால் நாட்டுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது எனவும் வெளிவிவகார…

மேலும் வாசிக்க

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை.​

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளது. மாவீரர் நினைவேந்தல்களை நடத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் யாழ் நீதிமன்ற நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். நவம்பர் 27ஆம் திகதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.

நிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை வியாழக்கிழமை பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை வழங்கப்படுகிறது..

மேலும் வாசிக்க

நிவர் புயலின் தாக்கம் – தமிழகத்தில் பாரிய மழை.

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடுமையான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணித்தியாலங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி மழை வரை தொடரும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக சென்னையில் 16 சென்றி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ரிஷாட்டுக்கு பிணை.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளிலும் ரிஷாட் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். நாட்டிலும் சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்த நீதவான், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நிபந்தனை விதித்துள்ளார். அரசுக்கு சொந்தமான 95 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு.

கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை(26) முதல் டிசம்பர் (04) வரை மூடப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா கொத்தணிகள்.

ஷானி அபேசேகரவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கொத்தணி 753 ஆக உயர்ந்துள்ளது. -அத்துடன் 256 STF அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் கொத்தணியானது 1,095 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க

நானுஓயா-கிளாரண்டன் தோட்ட காரியாலயம் தனிமைப்படுத்தலில்.

டி.சந்ரு: நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்ட காரியாலயம் கடந்த மூன்று தினங்களாக தனிமை படுத்தப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்தில் தபால் சேவை தொழில் புரியும் எவோக்கா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மகளுக்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மகளின் வீட்டிற்கு குறித்த சேவையாளர் சென்று வந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கிளாரண்டன் தோட்ட காரியாலயத்தில் தொழில் புரிவோர் உட்பட காரியாலயமும் தனிமை படுத்தப்பட்டுள்ளது.இதனில் நானுஓய கெல்சி பகுதியை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்கி உள்ளார். ஆகவே கெல்சி தோட்ட பாடசாலை மாணவர்கள் எபஸ்போட் பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேலையில் எபஸ்போட் பாடசாலையின் அதிபர் மாணவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.சங்கீதா

மேலும் வாசிக்க