உலகம்செய்திகள்

Barnaby Joyce துணைப்பிரதமராக தெரிவு.!

கட்சியின் தலைமைத்துவ வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற Barnaby Joyce அவுஸ்ரேலியாவின் துணைப்பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்காக இன்று நடைபெற்ற போட்டியில், மைக்கல் மக்கோமக்கை அவர் தோற்கடித்துள்ளார்.

காலநிலை கொள்கை தொடர்பான தமது கட்சியின் தலையீடுகள் குறித்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக கரிசனை செலுத்திவந்த நிலையிலேயே இந்த மாற்றமும் இடம்பெற்றுள்ளது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தக் கட்சி, விவசாயிகளையும், கிராமிய வாக்காளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன், அதற்கு 21 உறுப்பினர்கள் உள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button