இன்றைய சிந்தனை

ஏராளமான உற்பத்திகள் செய்யும்இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்என்ன பயன்..நாம் வறுமையில் தான்உழன்று கொண்டிருக்கிறோம்.இயந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதமே..! ஒருவர் கூட உங்களிடம்அன்பு காட்டவில்லை என்றால்நீங்கள் மனிதர்களைவெறுக்கலாம். சர்வாதிகாரர்கள் தாங்கள்சுதந்திரமாக இருந்து கொண்டுமக்களை அடிமைப்படுத்திவைத்திருக்கிறார்கள். புன்னகைத்து பாருங்கள்வாழ்க்கையும் அர்த்தம்உள்ளதாக மாறும். உங்களை தனியாகவிட்டாலே போதும்வாழ்க்கை அழகானதாகஇருக்கும். நமது அறிவு யார் மீதும் நம்மைநம்பிக்கை அற்றவர்களாகஆக்கி விட்டது.நமது புத்திசாலித்தனம்கடின மனம் கொண்டவர்களாகவும்இரக்கமற்றவர்களாகவும்நம்மை மாற்றிவிட்டது. உங்கள் மனதில் இருக்கும்குதூகலமும் மகிழ்ச்சியும்பிரச்சனைகளுடன் போராடமட்டும் அல்ல..அதிலிருந்து மீளவும் உதவும். போலிக்கு தான்பாராட்டும் பரிசும்..உண்மைக்குஆறுதல் பரிசு மட்டுமே.! ஆசைப்படுவதை மறந்துவிடு..ஆனால் ஆசைப்பட்டதைமறந்து விடாதே..!

மேலும் வாசிக்க

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள் 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். 1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன. 1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது. 1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. 1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான். 1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.[2] 1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர். 1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக்…

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

தற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் நகரக்கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். இந்த தத்துவங்கள் வாழ்க்கையை வென்ற மனிதர்களாலும் ஞானிகளாலும் சொல்லப்பட்ட நம்பிக்கை தரும் பொன்மொழிகள்.

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

”வாழ்க்கையின் போக்கில் சில தடைகள் உங்களைமேற்க்கொள்ள பார்க்கலாம். தடைகளைத் தாண்டிவாழ்க்கையை முன்நடத்திச் செல்லகற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ,அறியாமலோ செய்தஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக் கொள்ளாமல்சுதந்திரமாக செயல்படுங்கள்”. இனிய காலை வணக்கம்

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

“பறவையே எங்கு இருக்கிறாய்..? புள்ளினங்காள் பறவையைப் பற்றி பாடுவதென்றால் பறவையின் மனம் கொண்ட நா.முத்துக்குமார்’ன் எழுத்துக்கு சிறகு முளைத்து விடும். அப்படி சிறகடித்து பறந்த எழுத்துகளில் சில.. “பறவையே எங்கு இருக்கிறாய்..பறக்கவே என்னை அழைக்கிறாய்..!” “காற்றில் பறந்தே பறவைமறைந்த பிறகும்,கிளை தொடங்கும்நடனம் முடிவதில்லையே..!” “பறவை பறந்த தடயம்காற்றில் கிடைப்பதில்லை..!தெரிந்த பின்பும் இதயம்தேடல் நிறுத்தவில்லை..!” “பறக்காத பறவைக்கெல்லாம்பறவை என்று பெயரில்லை..!திறக்காத மனதில் எல்லாம்களவு போக வழியில்லை..!” எழுத்துக்காரன் பறந்து போனாலும் எழுத்துகள் பறந்துகொண்டு தானிருக்கும்.. பறவையாய் மாறி, பறவையிடமே பேசியபறவை மொழியில் எழுதப்பட்டபறவையினத்தின் “புள்ளினங்காள்” பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.என் மனதினுள்ளே ஒரு பறவை பறந்து கொண்டேயிருக்கிறது.. “மொழி இல்லை..மதம் இல்லை..யாதும் ஊரே என்கிறாய்..! புல், பூண்டுஅது கூடசொந்தம் என்று சொல்கிறாய்..! காற்றோடு விளையாடஊஞ்சல் அங்கே செய்கிறாய்..! கடன் வாங்கி சிரிக்கின்றமானுடன் நெஞ்சை கொய்கிறாய்..!”

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

நல்ல நண்பன் வேண்டும் என்றுஅந்த மரணம் நினைத்ததா !!!சிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடித்ததா !!! இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கு அது போதுமா ?இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா ? நா. முத்துக்குமார்

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

உனக்கும் இல்லை எனக்கும் இல்லைபடைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்,.. நல்லவன் யார் கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்…. நா.முத்துக்குமார்

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

குழந்தைகள் அழுதுகொண்டே பிறக்கின்றன,உலகம் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது,மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் செல்லம் கொஞ்ச இன்னொரு சக உயிர் இருக்கிறது,இந்த அன்பின் அசைவில் தான் இந்த உலகம் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது. புல்பூண்டு அனைத்தும் அழிந்து தனியாய் வாழ நேரும் உலகின் கடைசி மனிதனே அனாதை.அவனுக்கும் மழை பொழிய தலைக்கு மேல் மேகம் இருக்கும். ~நா.முத்துக்குமார்

மேலும் வாசிக்க