Browsing: இலங்கை

(எஸ். சினீஸ் கான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃப் எம்.எம். பூ…

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்கம்(Eastern University, Sri Lanka Alumni Association – EUSLAA) ஒழுங்கமைத்து நிதி அனுசரணை வழங்கிய “வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for…

கோல்பேஸ் போராட்ட நிலம் எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். கோல்ஃபேஸ் அகல காணியை கசினோ வியாபாரத்திற்கு குத்தகைக்கு வழங்கத் தயார் என தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜித ஹேரத் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதாக அவர் வலியுறுத்துகிறார். இன்று (22) பாராளுமன்றத்தில் அமைச்சர் விடுத்துள்ள முழு அறிக்கை பின்வருமாறு. ” கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் (20.02.2024) கோல்ஃபேஸ் மைதானத்திற்கு அருகிலுள்ள காணியை கசினோ திட்டத்திற்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாராக இருப்பதாகவும், விசும்பாயவில் உள்ள கட்டிடத்தை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினார். முதலாவதாக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கருத்து முற்றிலும் பொய்யானது மற்றும் அடிப்படையற்றது என்பதை நான் கூற விரும்புகின்றேன். வெளிநாட்டுத் திட்டங்களை நாட்டிற்குள் ஈர்க்கும் வகையில், 2022 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.   19.01.2023 அன்று நடைபெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபையானது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை மிகவும் சரியான முறையில் மதிப்பீடு செய்து பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் மிகவும் பொருத்தமான திட்டங்களை மட்டும் தெரிவு செய்யும் முறைமைக்கு அங்கீகாரம் வழங்கியது. இந்த வழிமுறையை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை இதன் மூலம் நான் முன்வைக்கிறேன். கெளரவ விஜித ஹேரத் அவர்கள் குறிப்பிட்ட கோல்ஃபேஸ் மைதானத்திற்கு அருகில் உள்ள போராட்ட களம் எந்த முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை. கொழும்பு 03, பாலதக்ஷ மாவத்தையில் உள்ள 01 ஏக்கர் காணிக்கான அபிவிருத்தித் திட்டத்திற்கான கோரிக்கையை பாலி இன்வெஸ்ட்மென்ட் தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக காணி வழங்கும் முறையின் படி அவர்களிடம் தகவல்களைப் பெற்று அதிகார சபை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 16.02.2024 அன்று கைச்சாத்திட்டது. சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் பத்தாயிரம் டொலர்களுக்கு சமமான தொகையை முற்பணமாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வைப்புச் செய்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட காணிக்கான அரசின் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இங்கு எந்த தவறும் செய்யவில்லை என்பதை கௌரவ விஜித ஹேரத் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திட்ட முன்மொழிவு ஒரு கலப்பு முதலீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்மொழிவு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக வெளிநாட்டு முதலீட்டாளருக்கு எந்தவொரு காணியையும் வழங்கவோ அல்லது அத்தகைய முதலீடுகளை அங்கீகரிக்கவோ மாட்டோம் என்பதை நான் இந்த சபைக்கு மிகவும் பொறுப்புடன் கூற விரும்புகின்றேன். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இரண்டாவது விடயமாக கூறியுள்ளதாவது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட குறைவாகவே இந்த விசும்பாய வழங்கப்படவுள்ளது என்பதாகும். கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள பழமையான கட்டிடங்களை அதன் தொன்மை மற்றும் தொல்பொருள் பெறுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி விசும்பாய திட்டம் தொடங்கப்பட்டது.…

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து  எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார். ” அவரின் கருத்து இலங்கை…

வெப்பமான வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று…

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து,…

இலங்கைப் பெண்களை வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்மொழிவை மற்றும் திட்டங்களை தனக்கு உடனடியாக வழங்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்;டு…

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உத்தர கண்டம் மாநிலத்தை சேர்ந்த சுவாமி கைலாஷ் நந்து ஜி ஹரிக்வார் அவர்களும், மோக்ஷா டிரஸ்ட் நிறுவனத்தின் பிரதானிகளும் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும்,…

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையான கொழும்பு கைரியா முஸ்லிம் கல்லூரியின் விளையாட்டு இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ விளையாட்டுச் சீருடை அறிமுக வைபவம். கைரியா மகளிர் கல்லூரியின்…