கவிஞர் கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..

பெருந்தோட்ட மக்கள் வாழ்வியலின் நிதர்சனங்களை வெளிக்கொணரும் பண்பாட்டு கவிஞர்கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் எழுதிய “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (23/01) சனிக்கிழமை கோவுஸ்ஸஹீரோ ஸ்டார் விளையாட்டு கழக விளையாட்டு திடலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கோவுஸ்ஸ ஹீரோ ஸ்டார் விளையாட்டு கழகத்தினரின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில்கொழுந்தம்மா கவிபுகழ் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதன் தான் பிறந்தமண்ணிலே தனது ‘இவன்’ கவிதைநூலை பிரசவிக்கசெய்தமை வரவேற்க்கூடிய அம்சமாகும். இதன்போது ஊர்மக்கள், இளைஞர்கள் புடைசூழ பிரதேச கவிஞர்கள், அதிபர்கள்ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன்விரும்பிகளென அனைவரும் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்திருந்தனர். அத்தோடு, கவிஞர் ராம்ஜி உலகநாதன் அவர்களின் கலைத்துறை திறமையைப் போற்றி பொன்னாடைப்போர்த்தி பாராட்டியதோடு விருதும் வழங்கி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்த மண்ணின் பெருமை பேசும் பண்பாட்டு கவிஞனைப் பார்போற்றச் செய்த பெருமைக்குரிய ஏற்பாட்டாளருக்கும் கவிஞர் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதனுக்கும் எமது…

மேலும் வாசிக்க

தீபாவளிப் படையல்!

தீபாவளி போனசுலசெலவெடுத்து மிஞ்சினதுலபூப்போட்ட சீத்தையிலபுதுசா ஒரு சட்ட தச்சிபுதுவருசோ(ம்) பொறக்கு(ம்)வரபத்திரமா பாத்துக்கனுபாசத்தோட கொடுக்கறப்போ…எடயில வாற பொங்கலுக்குஎன்ன செய்ய…எங்கம்மா கேக்கையிலஏக்கமான ஒரு பெருமூச்சுஎங்கப்பா பதிலாச்சு!மாசா மாசோ(ம்) சேத்து வச்ச மெளாறமசமசனு பத்தவச்சிஅடுத்த வூட்டு புள்ளைக்குஅண்டாவுல கொதிக்குதுவெந்நீரு!அம்மாயி எண்ண தேச்சாஅப்பாயி கோச்சுக்குவாமாமா வீட்டில் கை நனைச்சாசித்தப்பா சிலுத்துக்குவார்!கொண்ட சேவல் கழுத்த வெட்டிகொதிப்பாக கொழம்பு வச்சிபலகார(ம்) பச்சடியோடபடையல பரப்பி வச்சிநரைவிழுந்த பெருசு தொட்டுநண்டு சிண்டு கடைசிவரசாம்பிராணி போடயிலகறுப்பு வெள்ள போட்டோவுலகம்பீரமா சிரிச்சாருஏந்தாத்தாகதண்டா வந்த எமராசே(ன்)கடிச்சி கொதறயிலுகத்திய வுடலயே – கவ்வாத்துகத்திய வுடலியேனு அப்பத்தா ஆரம்பிச்ச ஒப்பாரிஅடுத்தவூட்டுக் கண்ணெல்லாம்குளமாச்சு!ஆனா இப்போபத்துப் பார்சல் கட்டிபரதேசிக்குக் கொடுத்தா போதுமுனுபட்டணத்தா(ன்) சொல்லக் கேட்டுபடையல் வைக்க மறந்துட்டுபறந்து போச்சு பந்தமெல்லா(ம்)ஏழெட்டு வருஷமாச்சுஏந்; தாயி உசுருபோயிபடையலுக்கு ஏங்குறதுபாவி மக பாக்குறேமா – நீபடையலுக்கு ஏங்குறதுபாவி மக பாக்குறேமாஒத்த வீட்டு திண்ணயிலஒண்டியா வாழுறனேசெதஞ்சி போன ஏஞ்சனோசேந்து வந்து போடுமானு – படையல்போடுமானு…ஒன்னப்…

மேலும் வாசிக்க

வல்லினம் 2.0 – பேச்சுப்போட்டி

கவிகை அமையாமனது தன்னார்வத் தொண்டினூடாக நிலைப்பேறான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கினைக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலாபநோக்கமற்ற நிறுவனமாகும். கவிகை வாயிலாக இலங்கையின் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தின் புத்துயிர்ப்பிற்காய் சாணக்யா, சிற்பி, வல்லினம், விழுது மற்றும் அக்க்ஷயா என பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வகையில் வல்லினம் செயற்திட்டமானது, மாணவர்களின் விவாதத்திறன், பேச்சாற்றல் மற்றும் ஆளுமையினை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன் முதற் செயற்திட்டம் கொழும்பு கொடஹெனா பிரதேசத்தில் ஐந்து பாடசாலைகளை இணைத்து வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இம்முறையும் இளம் சமூகத்தின் செயலாற்றலை வளர்க்கும் முகமாக வல்லினம் 2.0 பேச்சுப் போட்டியினை பாடசாலை, பல்கலைக்கழக, கல்வி நிறுவன மாணவர்களிடையே நாடளாவிய ரீதியில் நடாத்த தீர்மானித்துள்ளனர்.போட்டியாளர்கள் தமது பேச்சுக்களை “உயிர்க்கொல்லி, இதுவும் கடந்து போகும், வரும் ஆனால் வராது” எனும் தலைப்புக்களில் ஒன்றில், 3- 4 நிமிடங்களுக்குற்பட்ட காணொளியாகப்…

மேலும் வாசிக்க

அருட் தந்தை சக்திவேல் அவர்களுக்கு மனித உரிமை காவலன் விருது..

அருட் தந்தை மா.சக்திவேல் அவர்களுக்கு மனித உரிமை காவலன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நேற்றைய தினம் (02/10/2020) கண்டி தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற அருட் தந்தை மா .சக்திவேல் எழுதிய மலைத்தாயின் நெற்றிக்கண் எனும் நூல் அறிமுக விழாவின் போதே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையக தமிழர் பண்பாடு பேரவை இந்த விருதை அவருக்கு வழங்கியதோடு நீண்டகாலமாக அருட் தந்தை மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தது. குறிப்பாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உட்பட காணி பிரச்சனைகள் ,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல் கொடுப்பது போன்ற மனித உரிமைகள் சார் நடவடிக் கை ளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் வெளியிடப்பட்டது….

பிரான்சிஸ் திமோதிஸின் அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் இன்று வெளியிடப்பட்டது. கொட்டக்கலை ரிஷிகேஸ் மண்டபத்தில் இன்று 18/08/2020 பிற்பகல் 02 மணிக்கு குறித்த நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது. குறித்த கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வில் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் திருமதி கி .சந்திரலேக்கா தலைமைதாங்க ,பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணனும் ,சிறப்பு விருந்தினராக ஸ்ரீ பாத தேசிய கல்லூ ரியின் பீடாதிபதி கே .துரைராஜசிங்கமும் கலந்து சிறப்பித்தனர். குறித்த நூல் விமர்சன உரையை விரிவுரையாளர் ,ஆசிரியர் எம்.எச் .எம் .ஜவ்பர் வழங்கியிருந்தார். அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதியை எழுதிய இளம் எழுத்தாளர் பிரான்சிஸ் திமோதிஸிக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை பதிவு செய்கின்றது. டய்ஸி

மேலும் வாசிக்க

“அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் வெளியீடு ..

பிரான்சிஸ் திமோதிஸின் அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலை ரிஷிகேஸ் மண்டபத்தில் எதிர்வரும் 18/08/2020 செவ்வாய் கிழமை பிற்பகல் 02 மணிக்கு வெயிடப்படவிருக்கின்றது. குறித்த கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் திருமதிகி .சந்திரலேக்கா தலைமையில் இடம்பெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நான் மலையகத்தான்.. – கவிதை

பத்துக்கு பத்துதான்பாவத்தை கழிக்கும்ஆடம்பர மண்டபமாய்லயன்கள்ஒற்றையடிதான் இருக்கும்அதற்குள்ளும் அத்தனைகுன்று குழிகளா? இவையும் வீட்டின் ஓட்டைவழியே வாழ்வை சுட்டியதோஎன்னவோ?சேறும் சகதியும் ஆங்கங்கேஅட்டைப் புண்களுமோ எம்மவரின் அடையாளம்? ? வெயிலோ மழையோவென்றுபுதிதாய் கொத்திய அம்மியொத்தஓடுகளே காட்டிவிடும்நல்லது கெட்டது எதிலும்விலையால் பேசும் சிவப்புபானமும் ஆதியந்தமும் அந்தமும்அறியா புதிய மொழியோடுஊர் வம்பும் ஊறிக்கிடக்கும்இவையோ என்னவோ மலையகத்தானை வெளிக்காட்டும்அடையாளங்கள்… இல்லை,இல்லை இவைகள்மலையகத்தை அடையாளம்காட்ட கூடுமோ?இல்லை, எதிர் காலம் வரும்எதிர்ப்பும் வரும்நினைத்த மாற்றங்களோடுமலையகம்மாறவும்கூடும் By:- manjula subramaniyam

மேலும் வாசிக்க

‘வரளிதழில் சாரல்’ – கவிதை

காய்ந்த இதழ் இதுகாத்திருந்த வேளை அதுநீலப் பஞ்சனையில்ஆங்காங்கே வெல்மல்லிக்குஎன்ன குறை?-சிலவைதூவியும்-சிலவைமாலையாய் கட்டிலெங்கும்மறைத்தனரோ?உறவினர் கூற்றோ?ஊரார் மொழியோ? -இன்பமெய்யமறைப்பெண்ணும்- ஆவல் தூண்டநேர்ப்பையனும் -நெருங்கமுனைய-மல்லிகைநசுங்கி கலைய- மின்னியமெழுகுவர்த்தி மங்கவீட்டின் விளக்கொளியும்அணைய-மோதலில்மின்சாரம் பாய்ந்ததுவோ?காதோர முனங்கள் கேட்டுஎங்கும் மேளங்கள்கொட்டியதுவோ?இசையை ரசிக்கும்பொறுமையில்லா இவர்கள்முத்த சாரல்சொரிந்தனரோ……?இதழை வருடும்முதல் துளியாய்! Manjula Subramaniyam University of Colombo

மேலும் வாசிக்க

கசக்கிய காகிதம்…

வாசகர் கவர்ந்தகாகித ஏடுகளில்மஞ்சள் படிந்துமண்ணில் கிடந்தஓர் ஏட்டின் – அழுகுர(ல்)லின்ஆரவாரம் மட்டும்அணையா வெள்ளமாய்! காகிதம் கிழிக்கும்அரக்கர் பிடித்தஏட்டின் பிடிக்கு – வலிக்குமருந்து தடவிடமுடியுமோ?மாறாத மஞ்சள்கறை படிந்த – அவ்வேட்டின்குரல்தான் அரக்கர்செவிகளுக்கு எட்டுமோ? கறையை போக்கசலவை செய்யின்ஏட்டின் உயிர்மீள திரும்புமோ?இதனாலோமாறாத கறைகளையும்முயற்சியின்பால்ம(றை)றந்(த்)தது ஏடுகளில்ஓர் ஏடாய்- அந்தகசக்கிய காகிதப்பெண்..! – Manjula SubramaniyamUniversity of Colombo

மேலும் வாசிக்க

மௌனப் போராட்டம்!

தாயே…எத்தனை மூட்டைகள்நீ சுமந்தாலும்,உனக்கான மரியாதைஅரசன் முதல் ஆண்டி வரைஎவனும் தரப்போவதில்லை. மனதை தேர்த்திக்கொள்வதை தவிரவேறொன்றும் அறியேன். உன்னால் உருவாக்கப்பட்ட உன் பிள்ளைகள்சர்கார் தொழில் சென்றதும் சர்க்காரர்களுக்கு மட்டுமேசவர்க்காரம் பூசுகிறார்கள். உன்னைப் பற்றிய பேச்சை எடுத்தால்,நாய் குழைக்கிறது அடங்கிவிடும்என்கிறான் படித்தவன் என்றபோர்வையில் இருப்பவன். படிக்காதவன் பேச்சுசபையில் செல்லாக்காசாகிறது.உனக்கு சேவை செய்யவேண்டியதோட்டத் தலைவனாே உன்னையையேபேரம் பேசுகிறான். உன்னால் அரசியல் மேடைகளை பார்த்தவன்அடுத்த தேர்தலுக்கே உன்னை பார்க்கிறான். சமூக போராளி என்று போர்க்களத்தில்எவன் பீரங்கிமுழக்கமிட்டாலும்அவனும் இவனின் அல்லக்கைகளோஎன்று திசைதிருப்பி ஆணவச்சிரிப்போடுகாய் நகர்த்துகிறான் இன்னொருவன்.அவன் வைத்திருக்கும் பெயரோ உண்மையின் உரைகல் லாம். உனக்காக உண்மையாக போராட்டம் கண்டார்கள்.தீர்வு கிடைத்துவிடும் என்ற கோட்டையும்கட்டினார்கள் கோட்டையில் எம் இளைஞர்கள்.இறுதியில் நடந்தது என்ன?குருதியுடன் அனுப்பினார்கள் காவல் நண்பர்கள். தொற்று நோய் வந்தும் தொழில் செய்யஅனுப்பினார்கள்.பாதுகாப்புக் கவசங்களுக்கோ சிவில் அமைப்புகளே முதலில் முன்வந்தது. பணக்காரனுக்கும் பக்கத்துவீட்டுக்காரனுக்கும்நாளுக்கொரு நிவாரணமாம்.அரசு அறிவிப்பு.நீ…

மேலும் வாசிக்க