புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.சிவயோகதேவன் காலமானார்…

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.சிவயோகதேவன் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்-இரக்குவானையை சேர்ந்த மல்லிகா கந்தசாமி காலமானார்..

மரண அறிவித்தல் -இரக்குவானையை சேர்ந்த மல்லிகா கந்தசாமி இன்று (27/11) காலமானார். அன்னாரின் ,கணவர்-கந்தசாமி (முன்னால் பிரதம இலிகிதர் தெனியாய விலி குறூப்),தந்தை-காலஞ்சென்ற தங்கையா(தெனியாய இரத்னாயக்க குறூப் பிரதம இலகிதர்), தாய் காலஞ் சென்ற தவமணி, மகள்மார் – சத்யகிருஷாந்தி சுவீடன் (முன்னால் ஆசிரியை பரியோவான் கல்லூரி இரக்குவானை) சத்யப்ரியா (ஆசிரியை ஷாஷ்ரா நந்த வித்யாலயாம் தெஹிவளை) மருமக்கள் -சதீஸ்குமார் (சுவீடன்) சிவகுமார் (கொழும்பு ) பேரப்பிள்ளைகள் – ஷனீத்,வயின்,ஆதித்யா தேவ்,அபிநயா நாச்சியார் ஆகியோர் ஆவர் ,அன்னாரின் பூதவுடல் சத்யா இல்லம் ,பண்டாரநாயக மாவத்தை,ரக்வான இல்லத்தில் இருந்து 28.11.2020 அன்று நான்கு மணியளவில் ரக்வான பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இதனை உற்றார் உறவினர் ஏற்று கொள்ளவும்.தகவல் – சிவகுமார் மருமகன்

மேலும் வாசிக்க

ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் நல்லடக்கம்..

காலஞ்சென்ற ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கண்டி கந்தகெடிய பொது மயானத்தில் நேற்று (23) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி வரை ஊடத்துறைக்காக பணியாற்றிய சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அன்னாரது பூதவுடல் புஞ்சி பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் 22/11/2020 அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கந்தகெடிய கீழ் பிரிவில் உள்ள அன்னாரின் வீட்டுக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கந்தகெடிய கீழ் பிரிவு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்!

மலையகம்.lk மற்றும் மலையகம் FM இணைய ஊடகத்தின் அறிவிப்பாளரும்,  நேர்கொண்ட_பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருமான சுதர்சன் அவர்களின் தந்தையாரான A.செல்லாயா அவர்கள், நேற்று இறைபதம் அடைந்தார். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, சுதர்சனோடு சேர்ந்து மலையகம்.lk குழுமமும் துயர் பகிர்ந்து கொள்கின்றது.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல்

கண்டி, கலகிரியவைச் சேர்ந்த K.லெச்சுமி அவர்கள் புதன்கிழமையன்று (21.10.2020) காலமானார். இவர் ராமையாவின் அன்பு மனைவியும், மகன்களான சரவணகுமார், தியாகராஜா (Rj தியாகு) Doha Radio-தமிழ் அவர்களின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை 22.10.2020 அன்று, பிற்பகல் 2.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் : மகன் தியாகு (கட்டார்)

மேலும் வாசிக்க

பதுளை மறை மாவட்ட குருமுதலவரும் மடுல்சீமை பங்கு தந்தையுமான இராஜநாயகம் அடிகளார் மறைந்தார் .

பதுளை மறைமாவட்டத்தின் குருமுதல்வரும், மூத்த குருவுமான அருட்தந்தை. மார்சல் இராஜநாயகம் அடிகளார் 26.04.2020 அன்று அதிகாலை இறைபதமடைந்தார். யாழ்ப்பாணம் மிருசுவிலை பிறப்பிடமாககொண்ட அருட்தந்தை 45 ஆண்டுகள் பதுளை மறைமாவட்டத்திலுள்ள பல பங்குகளில் குறிப்பாக மலையக தமிழ் மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வளர்சிக்காகவும் தன்னையே அர்ப்பணித்து பணியாற்றினார். அருட்தந்தையின் ஆன்மா இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.அன்னாரின் இளைப்பறுகை இறுதி ஆராதனை நாளை பி.ப 3.00 மணியளவில் பதுளை புனித அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க