பசறை பஸ் விபத்து- சிகிச்சைப் பெற்று வந்த கதிர்வேல் தர்மலிங்கம் காலமானார் ..

பசறை- பேருந்து விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மடுல்சீமை மஹாதோவை கீழ் பிரிவைச் சேர்ந்த கதிர்வேல் தர்மலிங்கம்(65)சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை (08/01/2020) உயிரிழந்தார். நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க

தைபொங்கல் நிகழ்வுகளுக்கு வலப்பனை பிரதேச சபை மூலம் நிதியொதுக்கீடு.

வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளுக்கு பிரதேச சபை மூலமாக நிதி ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரம் இன்றைய தினம் நடைபெற்ற வலப்பனை பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டது. பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து பேசினர். இங்கு கருத்துரைத்த பிரதேச சபை உறுப்பினர் சுஜிகலா, வெசாக் மற்றும் பொசன் தினங்களை போன்று தைபொங்களும் ஒரு தேசிய நிகழ்வாகும். எனவே, மேற்கூறிய இரு நிகழ்வுகளுக்கு சபை மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதை வரவேற்கும் அதேவேளை, தைபொங்கல் நிகழ்வுக்கும் சபையின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட சபை இனிவரும் காலங்களில் வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளுக்கு சபையிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதை போல் தைபொங்கல் நிகழ்வுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க

மலையகத்தின் பிரபல புகைப்படக் கலைஞர் சின்னையா கார்த்திகேசு காலமானார்.

பிரபல புகைப்படக் கலைஞர் சின்னையா கார்த்திகேசு இன்று அதிகாலை காலமானார். பசறை பிரதேச தன்னுடைய தோட்டத்தில் 1948 டிசம்பர் 14ஆம் திகதி பிறந்தார். இளமைக் காலம்முதல் கலைதுறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் நாடக கலைஞராவும் திகழ்ந்தார். இவர் பசறை மத்திய கல்லூரியில் கற்கும்போதுநடித்த “பெரிய கங்காணி வீட்டில் “நாடகம் மிகவும் பிரசித்தியடைந்தமைக் குறிப்பிடத்தக்கது. இனிமையாக பாடல்களைப் பாடுவதிலும் திறமைமிக்கவராக விளங்கினார். பல ஆலயங்களிலும், தோட்டங்களிலும் இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் பங்குபற்றி தமக்கென்ற அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டார். பிந்தைய காலங்களில் புகைப்பட கலைஞராகவும் தன்னை மாற்றிக் கொண்டார். சுமார் 35 வருடங்களுக்கு அதிகமாக புகைப்பட கலைஞனாகத்துறைக்கு பங்காற்றியுள்ளார். இத்துறையில் சிறப்புத் தேர்ச்சி மிக்கவராக இறைபதம் எய்தும் வரையிலும் திகழ்ந்தார். – நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க

யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துவ பீட மாணவன் தூக்கிட்டு தற்கொலை.?

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் மருத்துவத்துறையின் இறுதி வருட மாணவனாகிய கியூமன் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலையின் முன்பதாக இருக்கும் ஆண்கள் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவனின் நண்பர்கள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற நிலையில் கதவினை உட்பக்கத்தால் பூட்டி விட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருக்கும் அறை நண்பர்கள் அறைக்கதவை திறந்து பார்த்த பொழுது அழுகியநிலையில் உடலை கண்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரின் உதவியுடன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி

மேலும் வாசிக்க

இரங்கல் அறிவித்தல் – பரமசிவம்

திருச்சி மாவட்டம் , கரிய மாணிக்கம் கிராமம், வாழை மலை அம்பிட்டியை சேர்ந்த பரமசிவம் அவர்கள் 2019.10.24 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற மாரியாப்பிள்ளை, மூக்காயிம்மாவின் செல்வ புதல்வனும் சுசிலா (கலா) வின் கணவரும், பிரதிசன் தனிஷ்கா, சுபிட்சாவின் தந்தையும் ஆவார். காலஞ் சென்றவர்களான நாவலப்பிட்டி மூக்கப்பிள்ளை, காமாட்சியின் மருமகனும் கண்டி வைத்திலிங்கம், நாவலப்பிட்டி பாலசுப்பிரமணியம் (பாலா), காலஞ்சென்ற ராஜேந்திரன் (கீரிஸ்) ஆகியோரின் மைத்துனரும், புஸ்ஸல்லாவ சிவலிங்கம், மஸ்கெலியா மகேஸனின் சகலையும், கொழும்பு வசந்தி, மஸ்கெலியா ரமணியும் மச்சானும் ஆவார். ஏனைய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். தகவல் / தொடர்புகளுக்கு கிருஷாந் 0769842171 சி.வசந்தி 0777424248

மேலும் வாசிக்க