நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54.

பல கல்விமான்களை உருவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54. வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று வீறு நடைபோடும் கணபதி த.ம.வித்தியாலயமானது நோட்டன், கே.பி.என். நிறுவனத்தினரான நல்லுசாமி பரம்பரையினரின் சொத்தாக இருந்த முருகன் தியேட்டர் உரிமையாளர் சமூக நலன் கருதி பாடசாலை நடாத்த இடமளித்தார். பின்னர் கணபதி தோட்ட பாடசா லையாக மாற்றம் பெற்றது. நல்லுசாமி பரம்பரையினருடன் நோட்டன், பிரதேச வாழ் கல்வியலாளர்களான திருவாளர் சதீஸ், திருவாளர் செல்வம் குடும்பத்தினர் உட்பட பலரின் முயற்சியால் உருவாகிய கணபதி பாடசாலை பின்னாளில் சீடா திட்டத்தி னூடாக புதிய கட்டிடங்களை கொண்ட அரச பாடசாலையாக பரிணமித்தது. 54 வருட கால வரலாற்றை கொண்ட நோட்டன் கணபதி பாடசாலை அமைவிட சூழல் அதன் எல்லை அதீத அக்கறைக் கொண்டு பாதுகாக்கப்பட…

மேலும் வாசிக்க

விளாதிமிர் லெலின் இறந்த தினம் இன்று

வாழ்க்கைக் குறிப்பு லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர்.தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து…

மேலும் வாசிக்க

மலையக இளம் பெண் எழுத்தாளர் நிவேதாவின் மூன்று நூல்கள் இணைய வழியூடாக அறிமுகம்.

மலையகத்தின் மற்றுமொரு இளம் பெண் எழுத்தாளர் நிவேதாவின் மூன்று நூல்கள் இணைய வழியூடாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு கடந்த 30/12/20 அன்று அகில இலங்கை ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இணைய வழியாக இடம் பெற்றது. செல்வி அஷ்வினியின் இறை வணக்கத்தோடு ஆரம்பமான குறித்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி சுபானியின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைமையுரையினை ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நூல்களின் ஆய்வுரைகளை பேராசான் சசாங்கன் சர்மா, டீ.எஸ்.கோகுலன், செல்வி.முபஸ்ஸிரா ஆகியோர் வழங்க; நூல்களுக்கான வாழ்த்துரைகளை ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ராணி சீதரன், ஆசிரியை செல்வி. சாந்திரகுமாரி கனககரட்ணம் வழங்கினர். நன்றியுரையை நூலாசிரியர் செல்வி நிவேதா ஜெகநாதன் வழங்கினார். இவர் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் ஊடகவியலாளரும் செய்தி வாசிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பன்முகத்தன்மை உணர்வை பேணுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் கற்றல் அவசியம்..

ஒரு நாட்டின் பன்முகத்தன்மை, அந்த நாட்டின் படைப்பாற்றல் உணர்வு, மாற்றம், தனித்துவம், சமூகத்தின் உணர்வு, நல்லிணக்கம் மற்றும் அன்பு போன்றவற்றிற்கு ஒளியேற்படுத்துகின்றது. எமது இலங்கை தேசம், உலக வரைபடத்தில் ஒரு சிறிய நாடாகக் காணப்பட்டாலும், எமது தீவானது சிறந்த கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகின்றது. அது இன்னும் தனது நாட்டு மக்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பார்ப்பதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன, இன்னும் கேட்கப்படாமலும் பொதுமக்கள் சாட்சியாகவும் காணப்படும் எண்ணற்ற கதைகள் நாடெங்கும் உள்ளன. பன்முகத்தன்மை உணர்வை பேணுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் கற்றல் அவசியம். அத்தோடு, நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருடைய உளமறிந்து செயற்படல் மற்றும் ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க வேண்டும். நாம் தினமும் சந்திக்காதவர்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கச் செய்யும் நோக்கத்துடன் பன்முகத்தன்மையை உள்வாங்கி ஐக்கியத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பின் கீழ்…

மேலும் வாசிக்க

கொழும்பு தாமரைத் தடாகப் பேரரங்கில் அதிர்ந்த தமிழரின் பறை இசை!

இலங்கை அரசின் கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தும் அரச நாடக விழாக்களில் சிங்கள நடனங் களோடு ஓரிரு தமிழ் நடனங்களும் இடம் பெறுவது வழமை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அவர்களது பறைகள் கண்டிய நடனம் கிராமிய நடனங்கள் எனப் பல நிகழ்வுகள் இடம் பெறும் இலங்கைத் தமிழர் சார்பில் அலங்காரமாக ஒரு பரத நிகழ்ச்சியை அவர்கள் சேர்த்துகொள்வது வழமைஅது ஒரு மரபு. ஒரு வகைச் சடங்கும் கூட,அதுவும் கொழும்பிலிருந்துதான் அப்பரத நிகழ்வு தெரியப்படும் , இதனால் தமிழ்ர் என்றால் பரதம் என்ற ஓர் மனப்பதிவு சிங்கள மக்களிடம் உண்டு. வேறும் பல்வகை ஆட்ட வடிவங்கள் தமிழர் மத்தியில் இருப்பதை அவர்கள் பெரும்பாலும் அறியார் இம்முறை 11.09.2020 அன்று கொழும்பில் நெலும் பொக்குன ( தமரைத் தடாகம்) எனும் மிக பெரியதும் சகல வசதிகளும் கொண்டதுமான பெரிய அரங்கில்…

மேலும் வாசிக்க

மலையக தோட்டப்புற மாணவர்களின் கல்வியில் COVID-19 இன் தாக்கமும் அதனை எதிர்கொள்வதற்கான சில வழிமுறைகளும்.

COVID-19 இன் தாக்கமானது உலகலாவ ரீதியில் பெரும் பாதிப்பினை உண்டாக்கியுள்ளது. பெரும் செல்வந்த மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள நாடுகளே இதை கட்டுப்படுத்த முடியாது தடுமாறுகின்றது. குறிப்பாக உலகளவில் இதுவரை 186 நாடுகளை சேர்ந்த 1.2 பில்லியன் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், போக்குவரத்து என மக்களின் அன்றாட வாழ்வியலில் COVID-19ன் தாக்கமானது ஒரு பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் COVID-19 இன் பரவல் ஆரம்பித்த உடனேயே அரசாங்கமானது முதலாவது நடவடிக்கையாக பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையுமே முதன்முதலாக மூடியது. மாணவர்களையும் பிள்ளைகளையும் இந்த பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் சமூக பரவலை தடுப்பதுமே இதன் முக்கிய காரணிகளாகும். 2020 மார்ச் 12ம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்றுவரையில் (ஆகஸ்ட் 2020) தனது வழமையான செயட்பாட்டிற்கு திரும்பவேயில்லை. ஆங்காங்கே ஒரு கட்டுப்படுத்தப்பட்டளவிலிலேயே கல்வி நடவடிக்கைகள்…

மேலும் வாசிக்க

இணையவழிக்குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா.? இதோ சில தீர்வுகள்..!

அண்மைக்காலமாக இணையவழிக் குற்றங்கள் பல கோணங்களிலும் பெருகிவரும் நிலையில், இதனால் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் உள ரீதியில் வெகுவாக பாதிப்புற்றுவருகின்றமை தொடர்கதையாக மாறியுள்ளது. இணையவழியே பகிடிவதைகள் கூட அதிகரித்திருப்பதும் சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. இலங்கையில் இவ்வாறான இணையக்குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்று, அவற்றைப் பகுப்பாய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும் ஒரு செயல்திட்டமாக ஹிதவதீ திகழ்வதை பலருக்கும் தெரியப்படுத்தவே இந்தப்பதிவு. யார் எனக்கு உதவப் போகிறார்கள் ..? “எனக்கு சைபர் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது .. எனது மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டுள்ளது..அல்லது எனது புகைப்படம் ஒன்று திருத்தப்பட்டு ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது அல்லது ஃபேஸ்புக்கில் வெளியிடப்படுகிறது… இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்?” இதுபோன்ற சம்பவத்தை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அல்லது இது உங்கள் நண்பர் ஒருவருக்கு அல்லது தெரிந்த ஒருவருக்கு நடந்திருக்கிறதா?“ஹிதவதீ” என்பது உங்கள் உதவி…

மேலும் வாசிக்க

காலத்தால் அழியாத ஒரு தலைவன்.

தென்கிழக்கின் உதயதாரகை சம்மாந்துரை மன்னின் மைந்தன் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தான் தான் என்றில்லாமல் தன் மண்ணுக்காக தன் சொந்த நாட்டின் உறவுகளுகாக அயராது உழைத்த தலைவா உன்னை போல் ஒருவனுக்காக இச்சமூகம் ஏக்கத்துடன் காத்திருக்கிறது. பதவியா சமூகமா என்ற கேள்விக்கு சமூக நலனே என்ற ஒற்றை வார்த்தையிளும் செயலிளும் நிரூபித்த சமூக தொண்டனே உன் இழப்பு இன்றும் நிவர்த்தி செய்ய முடியாத இடைவெளி. சமூக ஒற்றுமையும் ஓருமைப்பட்டுக்காக அயராது உளைத்து இன்றும் எம்மை போன்று பலரின் உள்ளத்தில் இடம் பிடித்து உயிறாயில்லாவிடினும் உணர்வாய் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு நினைவாய் ஒன்றற களந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்.பிரிவினை வேண்டாம் என்று உறக்க மொளிந்த நாவினில் நான் அதிகம் கண்டதென்னவோ இறைவசனங்கள். ஒலுவில் துறைமுகம் தொட்டு தென்கிழக்கு பல்கலைகழகமாகட்டும் இன்னும் எழுத்துக்களால் பொறிக்கபடாத சாதனைக்கு சொந்தக்காரன். இரண்டு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டது…

மேலும் வாசிக்க

மலையகத்தின் தேசிய கூத்தான காமன் கூத்து. 

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைநாட்டிற்கு கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவர்களின் உழைப்பையும் உடைமைகளையும் மாத்திரம் சுமந்து வரவில்லை. அவர்கள் பின்பற்றிய கலை, கலாச்சார பண்பாடுகளையும் சுமந்து வந்தனர். பிரித்தானியரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்குமுறையாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் நடந்தேரிய கொடுமைகளாலும் மீள முடியாத துன்பத்திற்கு ஆளானார்கள். இதன் தாக்கம் இன்றும் எம் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் மன அமைதியை பெறுவதற்காகவும் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவற்றை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர். இவற்றில் மிக முக்கியமானது கூத்துக்கலையே. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப்…

மேலும் வாசிக்க

ஓரங்கட்டப்பட்ட “ஆட்டுக்கல்”

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும்.இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும். இது பெரும்பாலும் வடை, இட்லி, தோசை போன்ற உணவு பண்டங்களைச் செய்வதற்குத் தேவைபடும் அரிசி, உளுந்து மா போன்ற பொருட்களை அரைக்கப் பயன்படுகிறது. தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட இந்த கருவி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் எமது கமராவில் பதிவானது. இந்த ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது அல்லது அரைப்பதென்பது தனி கலை.பெண்களே இந்த கருவியை அதிகமாக பயன்படுத்துவார்கள்.இவ்வாறு மாவரைக்கும் போது பக்கத்து வீட்டில் உள்ள சகோதரிகளும் உதவிக்கு வருவார்கள்.ஆட்டுக்கல் இல்லாதவர்கள் லயத்தை விட்டு லயம் வந்து மாவாட்டி செல்வார்கள்.இவ்வாறு வருபவர்கள் ஒருவரை ஒருவர் உறவுச்சொல்லி அழைத்து நையாண்டி பண்ணி பேசுவது…

மேலும் வாசிக்க