கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தது இலங்கை.

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என நேற்றைய அமர்வின்போது, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என கூறினார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அத்தோடு அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் பிரகடனத்திலும் அடக்கம் செய்யும் முறைக்கு அனுமதி…

மேலும் வாசிக்க

கொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..

ஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயதான மாணவர் ஒருவருக்கு கடந்த 22ம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் கல்வி பயின்ற 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 9 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.  (TrueCeylon)

மேலும் வாசிக்க

சம்பள கட்டுபாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா..

சம்பள கட்டுபாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க

ஊடக கற்கை நெறி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் கவனம்..

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடக கற்கை நெறி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் கவனம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது. தமிழ் மொழி மாணவர்களை இலக்கு வைத்து, ஊடகத்துறையில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து ஊடகத்துறை அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு அறிய கிடைக்கின்றது. மூன்று மாதங்களில் ஊடக கற்கை நெறியை நிறைவு செய்து, பெறுமதியற்ற சான்றிதழ்களை வழங்குவதாகவும் அறிய முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்காக லட்சக்கணக்கான ரூபா, நிதி மோசடி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தற்போது ஊடகத்துறை அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகத்துறை அமைச்சிலோ அல்லது பத்திரிகை ஸ்தாபனத்திலோ எந்தவித பதிவுகளையும் மேற்கொள்ளாது, இவ்வாறான கற்கை நெறிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு, அதனூடாக நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விரைவில்…

மேலும் வாசிக்க

பிள்ளையான் விடுதலை..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட 05 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை…

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாசிக்க

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொவிட் தொற்று ..

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தயாசிறி ஜயசேகர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் மரணமடைந்துள்ளனர். அதன் படி நாட்டில் கொரேனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஐயசேகரவுக்கு கொரோனா தொற்று..

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஐயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவ ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற் போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் நால்வர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு..

நாட்டில் மேலும் நால்வர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க