புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்திற்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோவில் தனது முதல் பாடலை ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று திறக்கப்படுகிறது. வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால் புதிய ஸ்டுடியோவை உருவாக்கியுள்ள இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டுகளாக தனது படத்திற்கான இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மாஸ்டர் படம் ஜனவரி 13 திரையரங்குகளில்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை (தற்போது 50%) அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. விஜய், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றார்.…

மேலும் வாசிக்க

அரசியலில் இருந்து பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!

எதிர்வரும் 31ம் திகதி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய ரஜினிகாந்த், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினிகாந்த் இன்று (29) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.தனது டுவிட்டர் தளத்தில் ஊடாக ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ”கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் கட்சி ஆரம்பித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரம் பிரசாரம் செய்ய முடியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். 120 பேரை கொண்ட அண்ணத்த படக்குழுவில் கூட கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில்,தனக்கு 3 நாட்கள் வைத்தியசாலையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர்; சுட்டிக்காட்டினார். இந்த…

மேலும் வாசிக்க

ரஜினி – வைத்தியசாலையில் – கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணாத்த படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அப்பலோ வைத்தியசாலை நிர்வாம் நேற்று முற்பகல் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என மீண்டும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. எதிர்வரும் 31 ஆம் திகதி அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நுவரெலியா மாவட்ட இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு …

கொரோணா தொற்று நோய் காரணமாக மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். முக்கியாமாக கலைஞர்கள் சரியாக நிகழ்ச்சிகள் கிடைக்காமல் மிக மோசமான சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற சூழலில் நுவரெலியா மாவட்ட இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தினால் நத்தார் பண்டிகை கொண்டாடும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் ராஜ்போரா ,செயலாளர் கேதீஸ்வரன் வடிவேல் ரமேஸ் ஆகியோர் குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர். கடந்த தீபாவளி பண்டிகையின் போதும் இவ் ஒன்றியத்தால் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்க தீர்மானம்..

நாட்டில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து திரையரங்குகளைத் திறக்கவுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனினும், திரையரங்கின் மொத்த கொள்ளளவில் 25 வீத அனுமதியுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

குறும்பட இயக்குனர் லிங் சின்னாவின் “ஹிப்ரு லிலித்” குறும்படத்திற்கு விருது ..

Agenta 14 விருது வழங்கல் நிகழ்வில் இயக்குனர் லிங் சின்னாவின் “ஹிப்ரு லிலித்” குறும்படம் “Most Gender Sensitive Film Award” விருதினை பெற்றுள்ளது. மலையகம் .lk இயக்குனர் லிங் சின்னாவுக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் வாசிக்க

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார். அதிகாலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தனக்கும் தனிக்கட்சி விடயத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை விஜய்..?

நடிகர் விஜய் தனிக்கட்சி தொடக்கப் போவதாக வௌியாகியிருந்த செய்தி தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள அவர், தனக்கும் இந்த விடயத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் தனது முகாமையாளர்களும், மக்கள் இயக்க நிர்வாகிகளும் சம்பந்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் அஹமட் இந்த செய்தியை வௌியிட்டுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வௌியாகியிருந்தன. ஆனால் அது உண்மை இல்லை என நடிகர் விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றியுள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியமை குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் முன்னணி…

மேலும் வாசிக்க