அரச சேவை பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் சிலர் இன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதுவரை தமது சேவையை நிரந்தரமாக்கவில்லை என குற்றம்சாட்டியே அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர். கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நிறைவடைந்துள்ளது. ஒரு வருட பயிற்சியின் பின்னர் அரச சேவையில் நிரந்தரமாக்குவதாக வாக்குறுதியளித்து இணைக்கப்பட்ட பயிற்சி பட்டதாரிகளின் பயிற்சி காலம் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவர்களின் சேவை நிரந்தரமாக்கப்படவில்லை என பேரணியில் கலந்து கொண்டிருந்த ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

யாழில் ஆடைகள் கலைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண் மாணவர்கள்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து, அவர்களை பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோர்களால் இந்த முறைப்பாடானது கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படாத நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளை முன்னெடுத்து வருவதாகவும் அதன் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க

சுகாதார அமைச்சின் வளாகத்தில் பற்றி எறிந்த வாகனம்.

மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து ஒன்று இன்று (15/2) முற்பகல் தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது. தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட  அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளி ல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது.

மேலும் வாசிக்க

இலங்கையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள்.

நாடளாவிய ரீதியில் தங்கச்சங்கிலி கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் நேற்று  மாத்திரம் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது ஹபராதுவ, அக்மீமன மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்துள்ள இனந்தெரியாத நபர்களிருவர், 67 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.  இதேவேளை, அக்மீமன மற்றும் கிளிநொச்சி பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களாலே இவ்வாறு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பொரலஸ்கமுவ பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது,  கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கஹத்துட்டுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சந்தேக நபரான இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, பிளியந்தல, கஹாத்துட்டுவ மற்றும்…

மேலும் வாசிக்க

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

மாத்தறை – மொரவக்க பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க

விசேட அதிரடி படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட துப்பாக்கி களஞ்சியசாலை.

கட்டான-மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த துப்பாக்கி களஞ்சியசாலை ஒன்று காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சியசாலையில் இருந்து 08 துப்பாக்கிகளும், 1171 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஏப்ரல் 21 தாக்குதல் பிரதி அறிக்கை இன்னும் கிடைக்க பெறவில்லை.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என பேராயர் கர்தினால் இன்று [11/2] இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

நாட்டில் நிர்மாணிக்கபட உள்ள இரண்டாவது சூரிய சக்தி பூங்கா.

இலங்கையில் எரிசக்தி செயன்முறையை முன்னெடுத்துச் செல்லும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையமாகக்கொண்டு, நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது சூரியசக்தி பூங்கா திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் மேம்பாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ பகுதியில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. 2022 டிசம்பர் மாதத்தில் இந்த எரிசக்தி பூங்கா மூலம், தேசிய மின்சார கட்டமைப்புக்கு 100 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

தரமான தயாரிப்புகளை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்-பந்துல குணவர்தன.

மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்களை வழங்கும் வகையில் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டதோடு குறித்த சதொச களஞ்சியசாலைகளை சோதனையிடும் நடவடிக்கை  அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிசர, பூஸ்ஸ, குருணாகல், வெயாங்கொடை மற்றும் இரத்மலானை உட்பட அநேக பகுதிகளில் அமைந்துள்ள சதொச களஞ்சியசாலைகள் இவ்வாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நேற்றைய தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. தரமான தயாரிப்புகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் பந்துல குணவர்தன இவ்விஜயத்தின்போது தொிவித்தார்.

மேலும் வாசிக்க