கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board வழங்கும் நிகழ்வு இன்று ..

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board ஒன்று இன்று (1/12) வழங்கி வைக்கப்பட்டது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் எம் ஜிஏ பியதாச கலந்துகொண்டார். மலையக மாணவர்களின் கல்வியை மேம் படுத்துமுகமாக அமெரிக்காவில் இருக்கும் செல்லதுரை சிவராம், கனடாவில் இருக்கும் சுப்பையா சிவகுமார் (கியூபெக்) , கனடாவை சேர்ந்த பெரியசாமி பாலேந்திரா (கியூபெக்) ஆகியோரின் நன்கொடையின் கீழ் குறித்த Smart Board வழங்கி வைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . குறித்த Smart Board ஆனது அனுசரணையாளர்களின் தந்தை மார்களின் நினைவாக வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும். சுதர்ஷினி ,மஞ்சுல சமந்த தம்பதியினர், (கொட்டகலை) நிகழ்வை ஒழுங்கு படுத்திருந்தனர். தொலைநிலை கல்விக்கு பெரிதும் பங்களிப்பு வழங்கும் வகையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையை…

மேலும் வாசிக்க

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு பூட்டு.?

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

மேலும் வாசிக்க

நாயபெத்த இல:2 தமிழ் வித்தியாலய மாணவி சிவானந்தன் திவ்யரூபினி புலமை பரீட்சையில் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

ப/நாயபெத்த இல:2 தமிழ் வித்தியாலய மாணவி சிவானந்தன் திவ்யரூபினி வெளிவந்த புலமை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளார். மாணவியை அதிபர் உட்பட ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.டி சந்ரு

மேலும் வாசிக்க

புலமைப்பரிசில் பரீட்சையில் பது/ சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பது/ சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ருக்மன் பவிஷான் – (168), யோகேஸ்வரன் விஜிதன் – (167) புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களையும் வகுப்பாசிரியர் பிரதீபனையும் அதிபர் எஸ்.முருகையா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வாழ்த்துகின்றனர். நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பூட்டு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

புஸ்ஸல்லாவ-மாணவியின் கனவு நனவாகியது..?

வாழ்கையில் “கனவு கானுங்கள்”  என இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறிதில் உண்மை இருக்கின்றது என நிரூபித்துள்ளார் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி. மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும் போது தான் ஒரு சட்டதரணியாக வர வேண்டும் என கனவு கண்டார். தான்  கல்வி கற்றும் போதே தான் ஒரு சட்டதரணி என எண்ணிக் கொண்டார். தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு. தனக்கான சட்டதரணி முத்திரையும் பதித்துக் கொண்டார். இதன் பயனாகவும் கனவின் நனவாகவும் அன்மையில் வெளி வந்த உயர்தர பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீடத்திற்கு தெரிவாகி உள்ளார். உண்மையாகவே இது சாதனை தான்;. இவரின் திறமைக்கும்…

மேலும் வாசிக்க

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விபரம்!

நேற்றைய தினம் வெளியாகிய 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் படி, இந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளான 200 புள்ளிகளை 10 மாணவர்கள் பெற்றுள்ள அதேநேரம், 15 மாணவர்கள் புள்ளிகள் எதனையும் பெறவில்லை. 200 புள்ளிகளை பெற்றுள்ள 10 மாணவர்கள் விபரம். 📌மருதானை சாஹிரா கல்லூரியின் பர்சான் மொஹமட் 📌காலி சங்கமித்தை மகளிர் வித்தியாலயத்தின் சியத்தி விதும்ஷா 📌இங்கிரிய சுமணஜோதி வித்தியாலயத்தின் தெவ்லி யசஸ்மி 📌எஹலியகொடை ஆரம்ப பாடசாலையின் சேனுதி தம்சரா 📌எம்பிலிப்பிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தின் தொவிந்து சிரந்தித், அமர் 📌திம்புலாகலை சிறிபுற வித்தியாலயத்தின் தேனுஜா, மனுமித்தா ஆகியோர் ஆவர்.

மேலும் வாசிக்க

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹைலண்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹைலண்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 103 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றி 158 வெட்டுப்புள்ளிக்கு மேல் இந்த 46 மாணவர்கள் புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் . மேலும் பரீட்சைக்கு தோன்றிய அணைத்து மாணவர்களும் சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும் . பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் சுமார் 44% மாணவர்களை சித்தியடைய செய்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக குழு சார்பாக நன்றிகள். மேலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்கு தோற்றிய அணைத்து மாணவர்களுக்கும் அவர்களை தயார் செய்ய உதவிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . மாணவ செல்வங்களின் எதிர்காலம் சிறப்புற பழைய மாணவர் சங்கத்தின் வாழ்த்துக்கள் .

மேலும் வாசிக்க

அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது. எவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன . தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பதுளை, லுணுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா இந்து கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

பதுளை, லுணுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா இந்து கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக கல்லூரிக்கும் 14 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். மாணவர்களுக்கும், அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமுக்கு மலையகம் .lk சார்பான வாழ்த்துகள். நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க