மலையகத்தில் தொடரும் உதவும் கரம் கரங்கள் அமைப்பின் மக்கள் சேவை -இன்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு …

“அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவரும் உதவுவோம்” என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு ,விழித்தெழு அறக்கட்டளை ஒன்றியமும் இணைந்து தீபத் திருநாளை முன்னிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தை நாபுலுவ தோட்டம் இலக்கம் 1 ,2 பிரிவு மக்களுக்கும், தற்போது கொரோனா வைரசினால் முடக்கப்பட்டுள்ள பலாங்கொடை வளவை தோட்ட மக்களுக்கும், கொழும்பு வாழ் உறவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் வரக்காப்பொல தொடந்தெனிய எட்னாவள கணித்தபுர தோட்ட மக்களுக்கும் ,நூரிதோட்ட மக்களுக்குமான சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மலையகம் .lk மூலமாக நூரி தோட்டத்தில் விசேட தேவையுடையோர் தொடர்பான செய்தியை வெளி இட்டதை தொடர்ந்து அவர்களுக்கான சக்கர நாற்காலி,ஊன்றுகோல் சீமந்து ஆகியவை வழங்கிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் உதவுவோம்-உதவும் கரங்கள் அமைப்வு…

உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக “அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் உதவுவோம்”என்ற தொனிப்பொருளில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் காவத்தை வெள்ளாந்துறை நாபுலுவ இலக்கம் 1, இலக்கம் 2 பகுதியை சேர்ந்த 40 குடும்பங்களிற்கு இன்று (09/11) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இச்சேவையில் உதவும் கரங்கள் அமைப்பினுடைய பொருளாளர் அதிபர் பிரபாகர் உட்பட உறுப்பினர்களான பிரியந்த, நவநீதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். உதவும் கரங்கள் அமைப்பு தொடர்ச்சியாக மலையக பிரதேசங்களில் வறுமை நிலையில் இருக்கும் பல குடும்பங்களை தேர்வு செய்து உதவி நல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 21 வது சிரார்த்த தின நிகழ்வு …

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின்  21 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொட்டகலை  C.L.F வளாகத்திலுள்ள அண்ணாரின் உருவப்படத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மலர் மாலை அணிவித்து சிரார்த்த தினத்தை  அனுஷ்டித்தனர்.

மேலும் வாசிக்க

அமரர் கதிரமலை ஆறுமுகம் அதிபர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி…

அமரர் கதிரமலை ஆறுமுகம் அதிபர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 02/09/2020 அன்று மாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வில் பிரதேச பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பழையமாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன் போது அமரர் ஆறுமுகம் அதிபர் தனது சேவைக்காலத்தில் ஆற்றிய பாரிய சேவைகள் பற்றி நிகழ்வில் நினைவு கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் கௌரவிப்பு விழா

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் அதன் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கலை நிகழ்வொன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு 11, கதிரேசன் வீதியிலுள்ள கதிரேசன் மண்டபத்தில் இந்த இசை கலை விழாவும் கலைஞர்ககள் கௌரவிப்பு விழாவும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இம்மன்றம், தமிழ் மக்களிடையே அருகி வரும் நையாண்டி மேளம், பறை இசை மேளம், காவடி, கரகாட்டம் என பவ்வேறு கிராமிய இசை வாக்கிய கருவிகளின் இசை நிகழ்வையும் கிராமிய நடன நிகழ்வுகளையும் இடம்பெறவுள்ளது. மேலும் குறித்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் இலங்கையில் பிரபல்யமான தமிழ் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் என 60 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர். இதனை இம் மன்றத்தின் தலைவர் எஸ். விஜயராஜ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

நுவரேலியா- ஹபுகஸ்தலாவையில் சுமார் 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர் தாங்கி

அல்-நூர் அறக்கட்டளை சங்கத்தின் ஊடாக நுவரேலியா ஹபுகஸ்தலாவையில் சுமார் 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர் தாங்கி இரண்டு அமைக்கப்படுவதற்கான வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் அல்-நூர் அறக்கட்டளை சங்கத்தின் தலைவர், மலையக கலாச்சார ஒன்றியத்தின் செயலாளர் ரகு இந்திரகுமார் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் அருகிலுள்ள பாடசாலைக்கும், அண்மித்த 500 குடியிருப்புகளுக்கும் நீர் வினியோகம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க

ரத்தினபுரி வாழ் இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்வு …

ரத்தினபுரி வாழ் இளைஞர், யுவதிகள் ,முதியோர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்வு எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி தேஹேனகந்த ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய மண்டபத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வை உதவும் கரங்கள் அமைப்பு முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வுக்கு மலையகம் .lk ஊடக அனுசரணை வழங்குகின்றது .

மேலும் வாசிக்க

தேயிலைச் சாயம் புகைப்படக் கண்காட்சி..

நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது ஒரு தேநீர் கோப்பையை சுவைக்கின்றீர்களா?அது உங்களுக்கு எவ்வளவு இனிமையை, சுகத்தைக் கொடுக்கிறது? ஆனால், இந்தச் சுவையான தேநீர் கோப்பையின் சுவையின் அடியில் உள்ள கண்ணீரின் கதையை நீங்கள் அறிவீர்களா? தேநீர் கோப்பைக்காக க~;டப்படும் சகோதர மக்களைப்பற்றி நீங்கள் ஒரு நொடிப்பொழுது யோசித்தீர்களா? அந்தத் தேநீர் கோப்பையில் மறைந்திருக்கும், மலையக மக்களின் வாழ்க்கையை, நாம் இப்புகைப்படக் கண்காட்சியின் ஊடாகப் படம்பிடித்துக் காட்டுகின்றோம்;.‘மலையக அடையாளத்தைக் கொண்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்தது முதல், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இச்சமூகம் வழங்கும் பங்களிப்பை விலை மதிக்க முடியாது.” ‘சிலோன் ரீ ” அல்லது இலங்கைத் தேயிலை உற்பத்தி காரணமாகவே இலங்கையை உலகு அறிகிறது ஆனால், தொடர்ந்தும் தேயிலைக் கொழுந்து பறித்தல், தேயிலைச் செடிகளைக் கவாத்து வெட்டுதல்;, பசளையிடுதல்…

மேலும் வாசிக்க

அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் வெளியிடப்பட்டது….

பிரான்சிஸ் திமோதிஸின் அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் இன்று வெளியிடப்பட்டது. கொட்டக்கலை ரிஷிகேஸ் மண்டபத்தில் இன்று 18/08/2020 பிற்பகல் 02 மணிக்கு குறித்த நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது. குறித்த கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வில் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் திருமதி கி .சந்திரலேக்கா தலைமைதாங்க ,பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணனும் ,சிறப்பு விருந்தினராக ஸ்ரீ பாத தேசிய கல்லூ ரியின் பீடாதிபதி கே .துரைராஜசிங்கமும் கலந்து சிறப்பித்தனர். குறித்த நூல் விமர்சன உரையை விரிவுரையாளர் ,ஆசிரியர் எம்.எச் .எம் .ஜவ்பர் வழங்கியிருந்தார். அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதியை எழுதிய இளம் எழுத்தாளர் பிரான்சிஸ் திமோதிஸிக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை பதிவு செய்கின்றது. டய்ஸி

மேலும் வாசிக்க

மலையகத்தில் புகைப்பட கண்காட்சி…

மலையகத்தில் “விதை” புகைப்பட கண்காட்சி ஒன்று இடம்பெறவிருக்கின்றது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 23ம் திகதி காலை 8.30 தொடக்கம் 5.30 மணிவரை தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது. மலையக இளைஞர் ,யுவதிகளின் கை வண்ணத்தில் உருவான புகைப்படங்கள் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க