தேசிய கலை இலக்கியப் பேரவையின் 101ஆவது தாயகம் இதழ் வெளியீடு..

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 101ஆவது தாயகம் இதழ் மலையக மக்கள் இலக்கியத்தின் கோபுர கலசம் மல்லிகை சி குமார் சிறப்பிதழ் வெளியீடு தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் 2021.02.27ஆம் திகதி அன்று இடம் பெற்றது. நிகழ்வில் மல்லிகை சி குமாரின் புதல்வன் மாறன், தேசிய கலை இலக்கிய பேரவையின் செயலாளர் சிவ ராஜேந்திரன் ,கவிஞர் வே .தினகரன் , லுனுகலஸ்ரீ , சை. கிங்ஸ்லி கோமஸ் ,செம்மலர் மோகன் ,சந்திர லேகா கிங்ஸ்லி ,சத்குரு நாதன் ஆகியோர் உறையாற்றுவதையும் சகுந்தலா தேவி பாடல் பாடுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். கிங்ஸ்லி

மேலும் வாசிக்க

இராகலை உயர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் ஏற்பாட்டில் ரத்ததான நிகழ்வு!

இன்றைய தினம் இராகலை உயர் பாடசாலையின் எழுபத்து நான்காவது ஆண்டு நிறைவை சிறப்பிக்க பழைய மாணவர்களால் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான நிகழ்வினை மலையகம்.lk வின் மூலமாக நேரலையாக ஔிபரப்பப்பட்டது அறிந்ததே. இராகலை உயர் பாடசாலை மாணவர்களுடன் ஆரம்பம் முதல் இன்று வரை மலையகம்.lk கைகோர்த்திருப்பதை எண்ணி மகிழ்வதோடு ஏற்பாட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தூவுகிறோம். ரத்த தான நிகழ்வின் போது ரத்தம் வழங்கி தங்களின் மனநிறைவை வெளிப்படுத்தியவர்களுக்கு தலா ஒவ்வொரு மரக்கன்றுகளையும் கொடுத்து தங்களின் மகிழ்வினை தெரிவித்தார்கள் பழைய மாணவ சங்கத்தினர்கள். இதன் போது நகர காவல்துறை அதிகாரி, சுகாதார அதிகாரிகள், சகோதர பாடசாலை பழைய மாணவ சங்கத்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஹட்டன் மல்லியப்பு தோட்ட ஆலயத்திற்கு சிலை அன்பளிப்பு..

ஹட்டன் மல்லியப்பு தோட்ட ஆலயத்திற்கு ஐம்பொன்னாலான பிள்ளையார் சிலை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மல்லியப்பு தோட்ட ஆலய பரிபாலன சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் இணைந்தே இந்த பிள்ளையார் சிலையை ஆலயத்திற்கு பெற்றுக் கொடுத்தனர். ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் குறித்த சிலை ஆலய நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரிடமும் மல்லியப்பூதோட்ட ஆலய நிர்வாகத்தினர் சிலை தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். அதனடிப்படையில் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் தொழிலாளர் தேசிய…

மேலும் வாசிக்க

Sustainable Development Network மூலம் இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் பயிற்சி..

நுவரெலியா ஹீ நகர் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் பயிற்சியும் இளம் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்க அங்குரார்ப்பனமும் 2021.02.26 அன்று ஹீ நகர் ஆலய மன்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது இளைஞர், யுவதிகளுக்கு காளான் வளர்ப்பு தொடர்பான செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டதோடு விதைகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வை Sustainable Development Network ஒழுங்கு செய்ய அனுசரனையை நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் கேதீஸ் வழங்கியிருந்தார். நிகழ்வில் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையின் அதிபர் திருமதி சந்திர லேகா கிங்ஸ்லி ,சமூக செயல்பாட்டாளர்களான சன்முக ராஜா ,கிங்ஸ்லி கோமஸ், சதிஸ் ராமசாமி,கேதீஸ் ராமையா மற்றும் கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க

ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளமாக வழங்க இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.இ.தொ.கா முன்வைத்த 900 ரூபாய் அடிப்படைச் சம்பளமாகவும் 100 ரூபாய்  பட்ஜட் கொடுப்பனவுமாக இணைத்து, ஆயிரம் ரூபாயை வழங்க இறுதித் தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு  தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 சம்பள விடயத்தில்  கோரிக்கையொன்றை  முன்வைத்து அதனை சம்பள நிர்னயசபை பரிசீலனை செய்து    ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இதன்போது அரசாங்க தரப்பில் 3 பேரும் தொழிற்சங்கம் சார்பாக 8 பேரும் தோட்ட கம்பனிசார்பாக 8 பேரும்  கலந்துக்கொண்டனர். இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இ.தொ.கா.ஊடக பிரிவு

மேலும் வாசிக்க

கொட்டகலை தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்ப்பாட்டில் மலையக யுவதிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள்…

காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவனம் மீண்டும் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை செய்துள்ளது. இலங்கை இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து இப்பிரதேசத்தில் வாழும் யுவதிகள் 130 பேருக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. பத்திக், பின்னல் வேலைப்பாடுகள், எம்ரோய்டனிங் போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்கியதன் மூலம் இந்த யுவதிகள் வீடுகளில் இருந்தபடியே சுயதொழில்களை மேற்க்கொண்டு ஆதாயத்தை அடைய வாய்ப்பு கிட்டியுள்ளது தொடர்ச்சியாக ஏழு நாட்களில் இடம்பெற்ற இப்பயிற்சி வகுப்பில் எளிமையான முறையில் கற்கை நெறிகள் வழங்கப்பட்டுள்ளதால் பயிற்சிபெற்ற 130 யுவதிகளுமே பயன்பெற தகுதியுடையவர்கள். காங்கிரஸின் கனவுக்கூடமாக உருவாக்கம் பெற்று நீண்டகாலமாகவே பல்வேறு தொழில்நுட்ப பாசறைகளை நடாத்தி மலையகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு சுயத்தொழில் பயிற்சிகளை வழங்கியது காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையம் என்றால் மிகையல்ல. காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவத்தின் இந்த முயற்சிகளை வெளிநாடுகளிலும் கூட பாராட்டுப்பெற்றது ஏராளமான…

மேலும் வாசிக்க

டெஸ்போட் கீழ்ப்பிரிவு புனித செபஸ்தியர் ஆலயம் இன்று திறந்து வைப்பு.

டெஸ்போட் கீழ்ப்பிரிவு நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட புனித செபஸ்தியர் ஆலயம் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் கண்டி மறை மாவட்ட ஆயர் பேரருட். திரு. ஜோசப் வியானி பர்னாந்து ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் வருகையுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மலையக இளைஞர் , யுவதிகளின் சுயத் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக டயகம மற்றும் வட்டக்கொடை ஆகிய பிரதேசங்களில் கூட்டுப்பண்ணை கட்டிடத்திற்க்கான பணிகள் விரைவில்…

மலையக இளைஞர் , யுவதிகளின் சுயத் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக டயகம மற்றும் வட்டக்கொடை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் பிரஜா சக்தி நிலையங்களில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற கூட்டுப்பண்ணை கட்டிடத்திற்க்கான பணிகள் விரைவில் பூர்த்தியாக உள்ளது.     ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளில் இந்த கூட்டுப்பண்னை அபிவிருத்தியும் ஒன்றாகும்.   தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் முதன் முறையாக இராஜாங்க அமைச்சர்  ஜீவன்  தொண்டமான்  தலைமையில் தற்போது இந்த கூட்டுப்பண்னைக்கான நிர்மானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  சென்ற வருடம் 11.12.2020 அன்று  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கூட்டுப்பண்னை நிர்மானத்திற்கான ஆரம்ப பணிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைய விரைவாக…

மேலும் வாசிக்க

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நமுனுகுல வீதியில் உள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் நேற்று இரவு பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்தின் போது பசுக்களை பதுளைக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும், லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ப சறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்தி : ராமு தனராஜா

மேலும் வாசிக்க

நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54.

பல கல்விமான்களை உருவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54. வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று வீறு நடைபோடும் கணபதி த.ம.வித்தியாலயமானது நோட்டன், கே.பி.என். நிறுவனத்தினரான நல்லுசாமி பரம்பரையினரின் சொத்தாக இருந்த முருகன் தியேட்டர் உரிமையாளர் சமூக நலன் கருதி பாடசாலை நடாத்த இடமளித்தார். பின்னர் கணபதி தோட்ட பாடசா லையாக மாற்றம் பெற்றது. நல்லுசாமி பரம்பரையினருடன் நோட்டன், பிரதேச வாழ் கல்வியலாளர்களான திருவாளர் சதீஸ், திருவாளர் செல்வம் குடும்பத்தினர் உட்பட பலரின் முயற்சியால் உருவாகிய கணபதி பாடசாலை பின்னாளில் சீடா திட்டத்தி னூடாக புதிய கட்டிடங்களை கொண்ட அரச பாடசாலையாக பரிணமித்தது. 54 வருட கால வரலாற்றை கொண்ட நோட்டன் கணபதி பாடசாலை அமைவிட சூழல் அதன் எல்லை அதீத அக்கறைக் கொண்டு பாதுகாக்கப்பட…

மேலும் வாசிக்க