பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நமுனுகுல வீதியில் உள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் நேற்று இரவு பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்தின் போது பசுக்களை பதுளைக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும், லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ப சறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்தி : ராமு தனராஜா
மேலும் வாசிக்கCategory: பதுளை
மலையக விழிகள் அமைப்பினால் லெஜர்வத்தை தமிழ் வித்தியாலத்திற்கு சுகாதார பொருட்கள் கையளிப்பு.
கொவீட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கானவிழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றபதுளை மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பினரால்பதுளை, லெஜர்வத்தை இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி தொற்றுநீக்கு பதார்த்தங்கள் மற்றும் முக்கவசங்கள், சூழல் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வித்தியாலய அதிபர் கனகரட்ணம் அவர்களிடம் இன்று (08/02)கையளிக்கப்பட்டன. நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்கசமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
பசறை, பெல்ஹாதன்ன ஏழாம் கட்டையைச் சேர்ந்த பழனியாண்டி மாரிமுத்து அவர்கள் பதுளை மாவட்ட எல்லைக்குட்பட்டசமாதான நீதவானாக பசறை நீதவான் மன்றில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். இவர் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராகும். அத்தோடு பதுளை ரொக்கிள் காளியம்மன் தேவஸ்தான முன்னாள்குமாஸ்தாவாகவும், மடுல்சீமை பெருந்தோட்டப்பகுதிகளில் வெளிக்கள உத்தியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு சமூக நல அமைப்புகளில் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்து சமூக பணியாற்றுகின்ற சிறந்த சமூக சேவையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்கயூரி தோட்ட மாப்பாகல தோட்ட தொழிலாளி மலையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு..
யூரி தோட்ட மாப்பாகல பிரிவைச் சேர்ந்த தொழிலாளி லெட்சுமணன் ராஜேந்திரன் (56 வயது) நேற்று (06/02) சனிக்கிழமை தேயிலை மலையில் வழுக்கி விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இவர் திருமணம் முடித்த மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று (06)வேலைக்கு சென்று வேலை முடித்து வீட்டுக்கு வராத காரணத்தால் உறவினர்கள் தேடிச் சென்ற போதே தேயிலை மலைப்பகுதியில் சடலமாக காணப்பட்டார். பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது. வெளிவாரி மலையில் அமரத்தப்பட்ட தொழிலாளி தொடர்பில் உரிய தரப்பினர் கரிசனைக்காட்ட வேண்டுமென்பதே இத்தோட்ட மக்களினது எதிர்ப்பார்ப்பாகும். நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்கபசறை பிரதேசத்தில் மேலும் 04 பேருக்கு கொரோனா ..
பசறை பிரதேசத்தில் இன்று 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட முன்னைய தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணியவர்களாவர். இன்று (01/02)மாலை இவர்களை தனிமைப்படுத்தல் மத்திய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சுதாரார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்கமலையக விழிகள் நண்பர்கள் அமைப்பின் உத்தியோகப்பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு..
‘ மலையக விழிகள் ‘ நண்பர்கள் அமைப்பின் உத்தியோகப்பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (25/01) திங்கட்கிழமை பதுளை – நாரங்கல தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் சிவஞானம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர் சுகாதார நலன்கருதி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு கையாளக்கூடிய முகக்கவசங்கள், தொற்றுநீக்கி, சுத்திகரிப்பு பதார்த்தங்கள் உள்ளிட்டபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்கபசறை பிரதேசத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி
பசறை பிரதேசத்தில் நேற்று (25/01) திங்கட்கிழமை மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 18 ஆம் திகதி பசறை நகர பாடசாலையொன்றில் தொற்றுக்குள்ளான இரண்டு மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர் மாதிரி பரிசோதனையின் அடிப்படையில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்ட கோணக்கலை மற்றும் உடகம பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். நேற்று தொற்றுறுதி செய்யப்பட்ட நால்வரையும் காஹல்ல தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தொற்றாளர்களோடு நெருங்கிய உறவை பேணியவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 200 இற்கு அதிகமானோரின் பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை பசறை பிரதேசத்தில் 18 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாற்பதிற்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. நடராஜா…
மேலும் வாசிக்ககவிஞர் கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..
பெருந்தோட்ட மக்கள் வாழ்வியலின் நிதர்சனங்களை வெளிக்கொணரும் பண்பாட்டு கவிஞர்கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் எழுதிய “இவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (23/01) சனிக்கிழமை கோவுஸ்ஸஹீரோ ஸ்டார் விளையாட்டு கழக விளையாட்டு திடலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கோவுஸ்ஸ ஹீரோ ஸ்டார் விளையாட்டு கழகத்தினரின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில்கொழுந்தம்மா கவிபுகழ் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதன் தான் பிறந்தமண்ணிலே தனது ‘இவன்’ கவிதைநூலை பிரசவிக்கசெய்தமை வரவேற்க்கூடிய அம்சமாகும். இதன்போது ஊர்மக்கள், இளைஞர்கள் புடைசூழ பிரதேச கவிஞர்கள், அதிபர்கள்ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன்விரும்பிகளென அனைவரும் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்திருந்தனர். அத்தோடு, கவிஞர் ராம்ஜி உலகநாதன் அவர்களின் கலைத்துறை திறமையைப் போற்றி பொன்னாடைப்போர்த்தி பாராட்டியதோடு விருதும் வழங்கி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்த மண்ணின் பெருமை பேசும் பண்பாட்டு கவிஞனைப் பார்போற்றச் செய்த பெருமைக்குரிய ஏற்பாட்டாளருக்கும் கவிஞர் கோவுஸ்ஸ- ராம்ஜி உலகநாதனுக்கும் எமது…
மேலும் வாசிக்கவலப்பனை மற்றும் மடுல்சீமை பிரதேசங்களில் இன்று காலை நிலஅதிர்வு.
பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய கிராமத்தில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கைள விட சற்று பலம்வாய்ந்ததாக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 தொடக்கம் 4 மணிவரையில் மூன்று தடவை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சுமார் மூன்று செக்கன்களுக்கு உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் அச்சமடைந்திருக்கின்றனர். இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திலும் இன்று அதிகாலை 3.29 மணியளவில், ரிச்டர் அளவு கோளில் 1.8 ரிச்டராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் வாசிக்கபசறை – பாடசாலை மாணவர்கள் அறுவருக்கு கொரோனா தொற்றுறுதி!
பசறை நகர பிரபல பாடசாலை ஒன்றில்ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (21/01) செய்யப்பட்டது. இவர்களில் 4 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர். குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி இன்று தொற்றாளர்கள் உறஉறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். இவர்களில் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரும், லுணுகலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று பேரும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது. நடராஜா மலர்வேந்தன்
மேலும் வாசிக்க