மலையக விழிகள் அமைப்பினால் லெஜர்வத்தை தமிழ் வித்தியாலத்திற்கு சுகாதார பொருட்கள் கையளிப்பு.

கொவீட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கானவிழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றபதுளை மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பினரால்பதுளை, லெஜர்வத்தை இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி தொற்றுநீக்கு பதார்த்தங்கள் மற்றும் முக்கவசங்கள், சூழல் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வித்தியாலய அதிபர் கனகரட்ணம் அவர்களிடம் இன்று (08/02)கையளிக்கப்பட்டன. நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்-கும்பாபிசேகம் ..

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் (பழைய வசந்தா தியேட்டருக்கு அருகில்) “காசீஸ்வரர்” சிவலிங்கமும் பிள்ளையார் சிலையும் நாகசந்தான கோபாளர் சிலையும் நேற்று (03.02.2021) பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது   எண்ணெய் காப்பு நடைபெற்று வருகின்றது. இன்று  04.02.2021 காலை  9.00 மணி முதல் எண்ணெய் காப்பு  நடைபெற்று தொடர்ந்து கும்பாபிஹேகம் நடைபெறும்  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவனின் அருளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.“ஓம் நமசிவாய” பா.திருஞானம்

மேலும் வாசிக்க

நாவலப்பிட்டி நகரின் வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பூட்டு.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே நாவலபிட்டி வர்த்தக சங்கத்தினர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். நாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 18 ஆம் திகதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் 03 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

அமரத்துவமடைந்த அதிபர் எஸ்.சிவயோகதேவனின் மறைவுக்கான அஞ்சலி நயாபான தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது..

அமரத்துவமடைந்த  முன்னால் அதிபர் எஸ்.சிவயோகதேவனின் மறைவுக்கான அஞ்சலி நிகழ்வுகளில்  அவர் அதிபராக இருந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ நயாபான தமிழ் வித்தியாலயத்தில் அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று (04//12)நடைபெற்றது. இந் நிகழ்வில் அன்னராது அதிபர்கள், முன்னால் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், நண்பர்கள் ,மாணவர்கள்  பெற்றோர்கள் உட்பட தோட்ட மக்களும் கலந்துக் கொண்டார்கள். இதன் போது சர்வமத அனுஷ்டானங்களுடன் அன்னாரின் உறுவ படத்திற்கு மலர்மாலை அணித்து மலர்தூவி விளக்குகளுக்கு ஒளியேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன். அன்னார் தொடர்பான அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன. பா.திருஞானம்

மேலும் வாசிக்க

கண்டி மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு பூட்டு..

கண்டி மற்றும் அக்குரணை பகுதிகளில் சில பாடசாலைகள் எதிர்வரும் டிசெம்பர் 11ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணைபகுதியில் உள்ள 5 பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வைரஸ்பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.சிவயோகதேவன் காலமானார்…

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.சிவயோகதேவன் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

மேலும் வாசிக்க

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்..

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு முக்கியத்தவமானது அது எந்த மதமாகவும் இருக்கலாம். அந்த வகையில் மதங்ககளையும் மத சார்பான விடயங்களையும் மதஸ்தானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொருப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் தெல்தோட்டையில் மதஸ்தானம் ஒன்று பாதிக்கபட்டு வருவதையிட்டு செய்தியாக கொண்டு வருவதில் நாங்கள் கவலை அடைகின்றோம். இது மதத்திற்கோ அல்லது மதஸ்தானத்திற்கோ சேரு பூசும் நடவடிக்கை அல்ல. தப்புக்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் மதங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காவே. தற்போது தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஒரு ஆலயம் ஒன்று புரணரமக்கப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக இந்த ஆலயத்தின் நிர்மாண வேலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆலய நிர்வாக சபையினர் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என கூறியும் இதiனால் சைவ மக்கள் பெரிதும் பாதித்து வருவதாகவும் இதனை உடனடியாக திருத்தி…

மேலும் வாசிக்க

கண்டியில் – திகன பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு!

கண்டி திகன பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 09.28 அளவில் குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவு கோலில் 2.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

புஸ்ஸல்லாவ-மாணவியின் கனவு நனவாகியது..?

வாழ்கையில் “கனவு கானுங்கள்”  என இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறிதில் உண்மை இருக்கின்றது என நிரூபித்துள்ளார் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி. மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும் போது தான் ஒரு சட்டதரணியாக வர வேண்டும் என கனவு கண்டார். தான்  கல்வி கற்றும் போதே தான் ஒரு சட்டதரணி என எண்ணிக் கொண்டார். தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு. தனக்கான சட்டதரணி முத்திரையும் பதித்துக் கொண்டார். இதன் பயனாகவும் கனவின் நனவாகவும் அன்மையில் வெளி வந்த உயர்தர பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீடத்திற்கு தெரிவாகி உள்ளார். உண்மையாகவே இது சாதனை தான்;. இவரின் திறமைக்கும்…

மேலும் வாசிக்க