மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.அத்துடன், களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் 03 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மாத்தளை மேயர் அதிவிசேட வர்த்தமானி வௌியீட்டின் மூலம் பதவி நீக்கம்.

நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டல்ஜித் அலுவிஹாரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மாநகர சபையின் துணை மேயர் உள்ளடங்கலாக சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் நந்தலால் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் அதிவிசேட வர்த்தமானி வௌியீட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

மாத்தளை – கலேவலவில் கிணற்றில் வீழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் பலி!

கலேவல, ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவரும் 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மாத்தளையில் ஏழு வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை.

மாத்தளை, கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில், 7 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுவன் சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) அவரின் வீட்டிற்கு அண்மையிலுள்ள கால்வாய் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உறவினர்களுடன் வசித்து வரும் குறித்த சிறுவன், போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், சிறுவனின் சடலத்தில், துணியைப் பயன்படுத்தி கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்கள் காணப்படுவதாகவும் சம்பவ இடத்தில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க

மாத்தளை மாவட்டத்தில் 54 வீடுகள் சேதம்!

மழையுடனான வானிலை காரணமாக, மாவட்டத்தில் 54 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று, மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 18 கிரமங்களில் 34 வீடுகளும் ரத்தொட்டை, உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன என்று, பிரதேச செயலாளர் அமரவீர தெரிவித்தார். உக்குவலைப் பிரதேசத்தில், மலைப்பாங்கான பகுதிகளில் வசித்துவரும் மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

மாத்தளை நகரில் மாவா போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ?

மாத்தளை நகரில் மாவா போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 50 கிலோகிராம் மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைப்பற்றப்பட்ட மாவா போதைப் பொருள் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

மாத்தளை – செங்கலகடை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் .?

மாத்தளை, செங்கலகட தோட்ட மக்கள் இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலாத்துறையின் மையமாக விளங்கும் செங்கலகட பகுதியை குறித்த தோட்ட அதிகாரிகள் கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என சுட்டிக்காட்டியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழ்ச்சி திட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக செங்கலகட குளம் அமைந்துள்ள பகுதி விளங்குகின்றது. இப்பகுதியையே ஆக்கிரதித்து – போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு நடைபெற்றால் சுற்றுலாத்துறையை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க

மாத்தளை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி

மாத்தளை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இன்று காலை ஆலயத்தில் இருந்து தேர் வெளியில் வந்து மாத்தளை நகரை சுற்றி வலம் வந்து நாளை மாலை மீண்டும் ஆலயத்தை சென்றடையவுள்ளது. குறித்த தேர்திருவிழாவை காண நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்துள்ளனர். மாத்தளை நகரில் 108 அடி இராஜகோபுரத்தை உடைய இவ்வாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். இதில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மனுக்கு மாசி மகத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மாத்தளையில் புதிய நீதிமன்ற கட்டிடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  பாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் விஜய வித்தியாலய பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் இந்த பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து .அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பாடசாலைக்கு அருகாமையில் அமைவதனால் பாதுகாப்புகள் நிறைந்த சூழ் நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க