கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board வழங்கும் நிகழ்வு இன்று ..

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board ஒன்று இன்று (1/12) வழங்கி வைக்கப்பட்டது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் எம் ஜிஏ பியதாச கலந்துகொண்டார். மலையக மாணவர்களின் கல்வியை மேம் படுத்துமுகமாக அமெரிக்காவில் இருக்கும் செல்லதுரை சிவராம், கனடாவில் இருக்கும் சுப்பையா சிவகுமார் (கியூபெக்) , கனடாவை சேர்ந்த பெரியசாமி பாலேந்திரா (கியூபெக்) ஆகியோரின் நன்கொடையின் கீழ் குறித்த Smart Board வழங்கி வைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . குறித்த Smart Board ஆனது அனுசரணையாளர்களின் தந்தை மார்களின் நினைவாக வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும். சுதர்ஷினி ,மஞ்சுல சமந்த தம்பதியினர், (கொட்டகலை) நிகழ்வை ஒழுங்கு படுத்திருந்தனர். தொலைநிலை கல்விக்கு பெரிதும் பங்களிப்பு வழங்கும் வகையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையை…

மேலும் வாசிக்க

கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு!

யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட் 19  தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்தல் எனும் செயற்திட்டதின் கீழ் பெருந்தோட்டத்தில் வசிக்கும் தோட்ட அமைப்புக்களின் தலைவர்களை விழிப்புணர்வு செய்யும் கருத்தரங்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டங்களில் நடைபெற்றது. இதற்கு வளவளராகாக மாவட்ட சுகதார கல்வி உத்தியோகத்தர் நயனி விஐய விக்கிரம கலந்து கொண்டு கருத்தரங்கினை வழிநடாத்தினார். கொரானா தொற்று எற்படுதவதற்கு முன்னர் செய்து கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் கொரானாவினால் ஏற்படும் தாக்கம் பற்றியும் விளக்கி கூறினார் இக்கருத்தரங்கானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான நிதியுதவிவினை கொரியசர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது. எம். எச். ஆஸாத் – பாலமுனை

மேலும் வாசிக்க

நானுஓயா-வங்கி ஓயாதோட்டத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று..

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வங்கி ஓயாதோட்டத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த நிலையில் கடந்த 27ம் திகதி தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட யுவதியோடு தொடர்பை பேணிய 21 வயது டைய யுவதிக்கேஇவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டீ .சந்ரு

மேலும் வாசிக்க

நோர்வூட்-நியுவெலி தோட்டதில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலையக சமூக அபிவிருத்தி பேரவை உதவிக்கரம் நீட்டியது…

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியுவெலி தோட்டத்தில் 12 அறைகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் கடந்த 27ம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியது. இதன் போது 50 பேர் பாதிக்கப்பட்டனர். இதேவேளை இவர்களின் வீடுகளில் இருந்த உடைகள், பெறுமதி மிக்க பொருட்கள் சிவில் ஆவணங்கள், நகைகள் மற்றும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயினால் வீனாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தேவையறிந்து வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மலையக சமூக அபிவிருத்தி பேரவை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மயைக சமூக அபிவருத்தி பேரவையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான என்.முரளிதரன், ஆர். சந்திரமோகன், எஸ்.புஸ்பராஜ் மற்றும் என். நகுலேஸ்வரன் ஆகியோரால் நேரடியாக சென்று மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது

மேலும் வாசிக்க

லிந்துலை மெராயாவில் ஒருவருக்கு கொரோனா

லிந்துலை, மெராயாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது. 30 வயது யுவதிக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றுக்குள்ளான யுவதி கொழும்பில் இருந்து கடந்த 19ம் திகதி வீடு திரும்பிய நிலையில் 22ம் திகதி பி சி ஆர்பரிசோதனையின் பிரகாரம் இன்று அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட் ட து. தற்போது குறித்த யுவதியோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவரை அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி தெரிவித்தார். துவாரக்க்ஷன்

மேலும் வாசிக்க

ஹட்டன் நகரை நவீனமயமாக்கி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் …

ஹட்டன் நகரை நவீனமயமாக்கி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) ஹட்டன்,டிக்கோயா நகர சபையின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது ஹட்டன் நகரத்தின் பிரதான பாதையை அகலப்படுத்தி புனரமைப்பது தொடர்பாகவும் அத்தோடு ஹட்டன் நகரின் வாகன  நெரிசலை குறைப்பதற்கும், முச்சக்கரவண்டிகள் மற்றும் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கும் தனியான இடத்தினை தெரிவுசெய்து வாகன தரிப்பிடம் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.    மேலும் ஹட்டன் நகரத்தின் வர்த்தகர்கள் வாகனசாரதிகள் மூலம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது ஹட்டன், டிக்கோயா நகரசபையின்  தலைவர் பாலச்சந்திரன், முன்னாள் மத்திய மாகான சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,நகரசபை உறுப்பினர்கள்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்,நகர வர்த்தகர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் வாசிக்க

நானு ஓயா-வங்கி ஓயா கீழ் பிரிவின் இரு லயன் குடியிருப்புகளைச் சேர்ந்த நூறுக்கு மேற்பட்டோர் சுயதனிமைப் படுத்தப்பட்டனர்..

டி சந்ரு -தகவல் உதவி முரளி நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானு ஓயா பிரதேசத்திற்குட்பட்ட வங்கி ஓயா தோட்டம் கீழ் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொழும்பில் கொரோனா வைரஸ் இருப்பது அடையாளம் காணப்பட்டது. அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் மீண்டும் அவர் மூன்று நாட்களுக்கு முன் கொழும்பு சென்ற நிலையில் இன்று அவருக்கு கொரானா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் வங்கி ஓயா தோட்டத்தில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகளில் உள்ள சுமார் நூறுக்கு மேற்பட்ட மக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்திற்கு வெளியார் பிரவேசிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

நுவரெலியா மாவட்டத்தில் 89 பேருக்கு கொரோனா,25 பேர் தீபாவளியை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் ..?

டி.சந்ரு நுவரெலியா மாவட்டத்தில் 23.11.2020 அன்று வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24.11.2020) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 442 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 89 தொற்றாளர்கள் (23.11.2020) நேற்று வரை அடையாளம் காணப்பட்டனர். இதில் 28 பேர் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வரவேண்டாம் என தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. தடுப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி வருகையை…

மேலும் வாசிக்க

நுவரெலியா – மதுபான விற்பனை நிலையம் ஒன்று தனிமைப்படுத்தலில் ?

டி சந்ருநுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (24.11.2020) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு கண்டியை சேரந்த ஒருவர் வருகை தந்து அங்கிருந்து மதுபானம் அருந்தி சென்றுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த மதுபான விற்பனை நிலையம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மதுபான விற்பனை நிலையம் நுவரெலியா நகரில் பிரதான வீதியில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நகரில் இயங்குகின்ற அனைத்து விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்கனவே குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சில விற்பனை நிலையங்களில் தகவல்கள் பேனப்படுவதில்லை என அறிய முடிகின்றது. தகவல்களை முறையாக…

மேலும் வாசிக்க

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயதில் கொரோனா வதந்தி பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள் ..?

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளியான வதந்தியின் காரணமாக பாடசாலைக்கு விரைந்த பெற்றோர்கள் மாணவர்களை இடைநடுவே தமது வீடுகளிற்கு அழைத்து சென்ற சம்பவம் இன்று(24) பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவதாவது  தனிமைப்படுத்தலில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த 07 மாணவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடியும் முன் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததை தொடர்ந்து  தகவல் அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு தங்களின் பிள்ளைகளை வீடுகளிற்கு அழைத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . குறித்த மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது பற்றி எவ்வித உறுதியான தகவல்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வி.சங்கீதா

மேலும் வாசிக்க