நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் .

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் சற்று முன்னர் இதனை உறுதிப்படுத்தியது.

மேலும் வாசிக்க

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் , மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாண கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இன்று முற்பகல் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக கிழக்கு கடற்கரையில் ஊடறுக்கவுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாகாண மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சூறாவளியினால் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பாடசாலைகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் ஏற்படக்கூடிய வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று நிலையை கருத்திற்…

மேலும் வாசிக்க

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 268 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் 24,255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6,320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 257 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,817 ஆக அதிகரித்துள்ளது இலங்கையில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

புதிய நீதியரசர்கள் நியமனம்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று மாலை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, உயர்நீதிமன்றத்துக்கு ஆறு நீதியரசர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 14 நீதியரசர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் அர்ஜுன அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 104 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காயமடைந்தவர்களில் சிறைச்சாலையின் தாதி ஒருவரும் மருத்துவ ஆலோசகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மஹர சிறைச்சாலையின் கைதிகளில் 38 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஹர சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகத்தை உடைத்து, உள ரீதியாக குழப்பநிலையை தோற்றுவிக்கக்கூடிய மருந்தினை உட்கொண்டமையே வன்முறைக்குக் காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை..

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த அருளையா ஜனகராசா (வயது- 60) என்ற வயோதிபரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு 20 சதவீதமாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என…

மேலும் வாசிக்க

ஹோல்புறூக் கோட்ட பாடசாலைகளின் நலன் கருதி டுப்ளோ இயந்திரம் அன்பளிப்பு..

மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் (Zonal) 2,3 ஆகியவற்றுக்கான டுப்ளோ(Duplo) இயந்திரமொன்று இன்று கனடாவில் வசிக்கும் பெரியசாமி பாலேந்திரா அவர்களின் நன்கொடையின் கீழ் இன்று(1/12) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பில் ,பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரிய அன்பளிப்பாக இதனை கருதுவதாக ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஜெயராம் தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நுவரெலிய வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச கலந்து கொண்டதுடன் அனுசரணையாளர்களாக மஞ்சுள சுமந்த சில்வா மற்றும் சுதர்ஷினி மஞ்சுள ஆகியோரும், கோட்ட கல்வி பணிப்பாளர்களான எஸ்.ஜெகதீஸ்வரன் மற்றும் ஏ.ஹரிச்சந்திரன் அபிவிருத்தி கல்வி பணிப்பாளர் எம்.கனேஸ்ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சங்கீதா

மேலும் வாசிக்க

கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு!

யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட் 19  தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்தல் எனும் செயற்திட்டதின் கீழ் பெருந்தோட்டத்தில் வசிக்கும் தோட்ட அமைப்புக்களின் தலைவர்களை விழிப்புணர்வு செய்யும் கருத்தரங்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டங்களில் நடைபெற்றது. இதற்கு வளவளராகாக மாவட்ட சுகதார கல்வி உத்தியோகத்தர் நயனி விஐய விக்கிரம கலந்து கொண்டு கருத்தரங்கினை வழிநடாத்தினார். கொரானா தொற்று எற்படுதவதற்கு முன்னர் செய்து கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் கொரானாவினால் ஏற்படும் தாக்கம் பற்றியும் விளக்கி கூறினார் இக்கருத்தரங்கானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான நிதியுதவிவினை கொரியசர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது. எம். எச். ஆஸாத் – பாலமுனை

மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கான முகக்கவசம் அன்பளிப்பு!

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன்; யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட்19 தொற்றில் இருந்து தோட்ட மற்றும் கிராம மக்களை சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கான அவசரகால செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட படாசாலை மாணவர்களுக்கான 3500 முகக்கவசம் அன்பளிப்பு 2020.11.30ம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான முகக்கவசத்தினை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பீ.ஆர்.புஸ்பகுமார படாசாலை அதிபர்களிடம் கையாளித்தார். இந்நிகழ்வில்  யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின்; பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல்.அன்வர்கான் திட்ட பொறியிலாளர் எம். நிமலன் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். தகவல்:எம்.எச்.ஆஸாத்- பாலமுனை

மேலும் வாசிக்க

நானுஒயா உடரதலை பாடசாலையில் மாணவன் யோகராஜ் நலிசான் புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

நானுஒயா உடரதலை பாடசாலையில் கல்வி பயிலும் யோகராஜ் நலிசான் வெளிவந்த புலமை பரீட்சை பெறுபேறுகளின் 164 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.படத்தில் மாணவனோடு அதிபர் – போல்ராஜ் வகுப்பு ஆசிரியர் – வின்மதிராஜ். டி சந்ரு

மேலும் வாசிக்க