பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்திக்கின்றார்..

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர், கொழும்பில் நடைபெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்திக்கவுள்ள இம்ரான் கான், பின்னர் பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று மாலை 4 மணியளவில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

மேலும் வாசிக்க

புதிதாக அடையாளங் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி …

புதிதாக அடையாளங் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த வார இறுதிக்குள் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவற்றை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கூறினார்.

மேலும் வாசிக்க

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்தார்..

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்தார்.

மேலும் வாசிக்க

மூக்குக் கண்ணாடி பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு..

மூக்குக் கண்ணாடி பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவாகவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூக்குக்கண்ணாடி பயன்படுத்தாதவர்களை விட, மூக்குக்கண்ணாடி பயன்படுத்துபவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்றும் அபாயம் மூன்று மடங்கு குறைவாகவுள்ளது. இந்த ஆய்வானது இந்திய ஆய்வாளர்கள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு 304 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் தொடர்ச்சியாக மூக்கு கண்ணாடியை அணிந்திருப்பவர்கள் தமது முகத்தை குறைவாக தொடுவதனால் அவர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் குறைவாகவுள்ளது என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்

மேலும் வாசிக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் சட்ட பணிகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தாவினால் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களம்

மேலும் வாசிக்க

மஸ்கெலிய-மொக்கா தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் அறுவர் வைத்தியசாலையில்..

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொக்கா தோட்ட கீழ் பிரிவில் இன்று மதியம் (23)தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்தொழிலாளர்கள் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் தேயிலை செடியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடே இவ்வாறு களைந்து கொட்டியதில் ஆறு ஆண்கள் மஸ்கெலிய மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் 70வயது,62வயது,64 வயது 70 வயது ,64 வயது, 30 ,வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கௌசல்யா.

மேலும் வாசிக்க

தலவாக்கலை -ஸ்கல்பா தோட்டத்தில் குளவிக்கொட்டு எட்டு பேர் வைத்தியசாலையில்..

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர் லிந்துலை வைத்தியசாலையில்23/02 இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறுபெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய ஆறு பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்ரு

மேலும் வாசிக்க

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது..

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாரானதாக ரயில் எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார். எனினும், இன்று முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை போக்குவரத்து அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். தங்களின் கோரிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சர் தொலைபேசியூடாக நேற்றிரவு அறிவித்ததாகவும் இந்திக தொடங்கொட தெரிவித்தார். அதற்கமைய இன்று முற்பகல் 11.30 அளவில் கலந்துரையாடல் ஆரம்பிக்கவுள்ளமையால் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து தீர்மானிக்கப்படும் என ரயில் எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார். சீன மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இரண்டு திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு…

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின..

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் ஐந்து பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு -12,13, நுகேகொட, மினுவங்கொட, துனகஹ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் கொரோனா மரணங்களே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்களாவர். அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 490 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் சிறைச்சாலைகள் கொத்தணியுடனும், ஏனையவர்கள் பேலியகொட கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் இதுவரை எண்பதாயிரத்து 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 75 ஆயிரத்து 110 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நான்காயிரத்து 957 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை இலங்கைக்கு வருகிறார்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை நான்கு 15க்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் மாலை ஆறு மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வௌியிடவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மொஹமூட் குரேஷி, வர்த்தகத்துறை தொடர்பான பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் டாவூட், வௌிவிவகார செயலாளர் சொஹெய்ல் மொஹமூட் ஆகியோரும், பாகிஸ்தானின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் வருகை தரவுள்ளனர்.

மேலும் வாசிக்க