திவிநெகும தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் விடுதலை..

திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடுத்து, அவர்கள் இன்று(30) விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடை கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது. அத்துடன்,  3 மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் ஆஜராக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் தளர்த்தப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

நோர்வூட் நிவ்வெலிகம தீ வீபத்தில் பாதிக்கபட்ட மக்களை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பார்வையிட்டார்….

நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட தொழிற்சாலை பிரிவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் 12  வீடுகளை கொண்ட லயன் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.இவ்விபத்தில் 50கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலே இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வை யிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள், மருந்துப்பொருட்கள், அத்தியாவசியபபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.   அத்தோடு இவர்களுக்கான வீடுகள் அமைப்பதைக்கான கட்டிட ஆராச்சி நிலையத்தின் அறிக்கையின் படி வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  அத்தோடு மலையகத்தில் இதுபோல ஏற்படும் திடீர் அனர்த்தங்களால் பாதிக்கப்படும் அனைத்து வீடுகளையும் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.   இவ்விஜயத்தின் போது நோர்வூட்…

மேலும் வாசிக்க

தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்…

தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்! 101ஆவது ஜனன தினம் இன்றாகும்.  📷பெயர்- வி.கே. வெள்ளையன்.  📷தந்தை – காளிமுத்து.  📷தாய் – பேச்சியம்மாள்.  📷 பிறந்த திகதி – 1918 நவம்பர் 28.  📷சொந்த ஊர் – பொகவந்தலாவை, முத்துலட்சுமி தோட்டம்.  📷ஆரம்பகல்வி – பொகவந்தலதாவை கெம்பியன்தோட்டப் பாடசாலை, பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயம்.  📷உயர்கல்வி – கண்டி திரித்துவக் கல்லூரி. (கண்டி திரித்துவக் கல்லூரியில் ரக்பி அணி தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.)  📷ஆரம்ப தொழில் – கூட்டுறவு சங்க முகாமையாளர். (இவரை தோட்ட துரையாக்க வேண்டும் என்பதே கங்காணி குடும்பத்தின் கனவாக இருந்தது. எனினும், பொலிஸ் அதிகாரியாகவே வெள்ளையன் விரும்பினார். அதற்கான விண்ணப்பமும் தாக்கல் செய்துள்ளார். எனினும், குடியுரிமை பறிப்பால் அந்த கனவு நிறைவேறவில்லை எனக் கூறப்படுகின்றது.) வெள்ளையன் கடந்துவந்த பாதை.  18ஆம் நூற்றாண்டில்…

மேலும் வாசிக்க

சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் அனுஷா

காலத்திற்கேற்ற சமூக செயற்பாடுகளையும் அதற்கான நேர்மையான கருத்துக்களையும் பதிவு செய்யாத எவராலும் மக்கள் செயற்பாட்டாளராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார். சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி, ஆகிய அமைப்புகளின் செயற்பாட்டு நோக்கம் சம்பந்தமாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது. கடந்த பொது தேர்தலில் எனக்கு நேரடியாக வாக்களித்த பதினேழாயிரத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முயற்சித்த ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொடுத்த ஆதரவினை தேர்தலோடு நான் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை இதற்கும் சமமாக இத் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வழங்கிய ஆதரவின் வெளிப்பாடே இது. இதனை எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு என் தந்தை வழியில் எனது மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளேன். நான் எதிர்ப்பார்த்ததை விடவும் வஞ்சகம் நிறைந்த களமாக இது இருந்தாலும் கூட…

மேலும் வாசிக்க

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் நாட்டுக்கு வருகை தருவதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதியும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருதரப்பினருடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வௌியாகவில்லை. இவ்வாறான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2014 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர..

இராஜாங்க அமைச்சர், ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார். இதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க

ஹட்டன் நகரை நவீனமயமாக்கி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் …

ஹட்டன் நகரை நவீனமயமாக்கி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) ஹட்டன்,டிக்கோயா நகர சபையின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது ஹட்டன் நகரத்தின் பிரதான பாதையை அகலப்படுத்தி புனரமைப்பது தொடர்பாகவும் அத்தோடு ஹட்டன் நகரின் வாகன  நெரிசலை குறைப்பதற்கும், முச்சக்கரவண்டிகள் மற்றும் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கும் தனியான இடத்தினை தெரிவுசெய்து வாகன தரிப்பிடம் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.    மேலும் ஹட்டன் நகரத்தின் வர்த்தகர்கள் வாகனசாரதிகள் மூலம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது ஹட்டன், டிக்கோயா நகரசபையின்  தலைவர் பாலச்சந்திரன், முன்னாள் மத்திய மாகான சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,நகரசபை உறுப்பினர்கள்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்,நகர வர்த்தகர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் வாசிக்க

ரணில் மீண்டும் பாராளுமன்றத்தில் ..?

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (23) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் இந்த நியமனம் தொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அடுத்த வாரமளவில் இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை அடைய முடியும் எனவும் அவர் மேலும் கூறினானார்..

மேலும் வாசிக்க

கொட்டகலை கிறிஸ்லஸ்பார்ம் தொடக்கம் கே.ஜி.கே வரையிலான பாதை செப்பனிடும் பணி ஆரம்பித்துவைக்கபட்டது.

கொட்டகலை கிறிஸ்லஸ்பார்ம் தொடக்கம் கே.ஜி.கே வரையிலான பாதை செப்பனிடும் பணி இன்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கபட்டது.

மேலும் வாசிக்க

நோர்வூட் பிரதேச சபை-பட்ஜட்’ மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு..

டி சந்ரு நோர்வூட் பிரதேச சபையானது காங்கிரஸின் சபை என்றும், எதிரணி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கமுடியாது எனவும் குறித்த சபையின் உப தலைவர் வெளியிட்ட கருத்துக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடும் வகையில் ‘பட்ஜட்’ மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் இன்று (19) வெளிநடப்பு செய்தனர். 2021 ஆம் நிதியாண்டுக்காக நோர்வூட் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கடந்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் ஆரயப்பட்டுள்ளன. இதன்போதே ஏற்பட்ட சர்ச்சையையடுத்தே முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு செய்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர்…

மேலும் வாசிக்க