கொவிட்-19 தொற்று நீரிழிவு நோயாளர்களுக்கு ஆபத்தானதா ?

கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துமென கருதப்படுகிறது. இது சுகாதார பிரிவினர் மற்றும் நோயாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மற்றுமொரு கவலையான விடயமாகவுள்ளது. அதாவது நீரிழிவு நோய் அல்லது நாட்பட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் சிரமப்படுகிறார்கள. அத்துடன் இந்த நிலைமை காரணமாக தங்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் 463 மில்லியன் வயது வந்தோர் நீரிழிவு நோயாளர்களாக இருப்பதால், உலக நீரிழிவு தினமான நவம்பர் மாதம்…

மேலும் வாசிக்க

9 வருடங்களில் 68,000 தொழிலாளர்கள் மாயமானது அம்பலம்!

ஆக்கம்: பா.நிரோஸ்தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஒன்பது வருடங்களில், 68 ஆயிரத்தால் குறைந்திருப்பது, தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாகத் தெரியவந்துள்ளது. தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில், தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக் கம்பனிகள் ஈடுபடுகின்றன.இந்தக் கம்பனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சிடம், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) தகவல்கள் கோரப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆங்கில மொழியில் வழங்கப்பட்டிருக்கும் பதில்களிலேயே, பெருந்தோட்டத் துறையில், கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொழிலாளர்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், சிலாபம், குருநாகல் ஆகிய இரு பெருந்தோட்டக் கம்பனிகள், தேயிலை உற்பத்தியில் ஈடுபடவில்லை…

மேலும் வாசிக்க

சிறந்த ஒரு தலைவரை மலையகம் இழந்துவிட்டது – ஆறுமுகன் தொண்டமானின் மறைவு.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்புஅமைச்சருமான பலம்பெறும் அரசியல்வாதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்தனது 55வது வயதில் காலமாகி உள்ளார். 1964 மே 29 ஆம் திகதி பிறந்த இவர் 56வயதைப் பூர்த்தி செய்வதற்கு 3 நாட்கள் இருந்த நிலையில் காலமானார். மாரடைப்புகாரணமாக கொழும்பு – தலங்கம வைத்தியசாலையில் 26.05.2020 அன்றுஅனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானார். கடந்த சுமார் 20 வருடகாலமாகபல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்த இவர், தற்போதைய அரசாங்கத்தில்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார். 1964 ஆண்டு மே மாதம் 29 ஆம்திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையகமக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.இவரது இழப்பானது மலையக மக்களுக்கு பேரிழப்பாகும். “ மக்களை ஆளவேண்டும் என நினைப்பதை விட…

மேலும் வாசிக்க

இன்று மரியா மொண்டிசோரி அம்மையாரின் நினைவு நாள்

மரியா மொண்டிசோரி பாலர் கல்விக்கு வித்திட்டவரின் நினைவு நாள் இன்று. ஆம் நம் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதில் இந்த பாலர் பள்ளிக்கு சென்று கல்விசார் விடயங்களுடன் இன்னும் பல இணைப்பாட விதான செயற்பாடுகளையும் கற்று மகிழ்சியோடு சென்று வாரும் பாலர் பள்ளியை ஆரம்பித்து வைத்தவர் இவர் தான். இதனை வாசிக்கும் அனைவரும் கட்டாயம் பாலர் பள்ளி(மொண்டிசோரி) சென்றிருப்பதற்கு வாயீப்புகள் அதிகம். இப்படியான எமக்கு பாலர் பள்ளியின் விதையினை விதைதவர் பற்றியும், ஏன் அதற்கு மொண்டிசோரி என பெயர் வந்தது என தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம். மரியா மொண்டிசோரி இவர் தான் இதன் ஆரம்பகர்த்தா. இலங்கை வந்து இதனை நிறுவியரும் இவரே. மரியா அவர்கள் இத்தாலியில் 50 ஏழை குழந்தைகளுக்கான கண்காணிப்பாளராக இருந்து வந்ததோடு, குழந்தைகளது சுட்டித்தனங்களை ஆக்கப்பூர்வம் உள்ளதாகமாற்ற வேண்டும் என நினைத்தவர். குழந்தைகள் ஆர்வமுடன் செயற்படவும்,…

மேலும் வாசிக்க

தாடிக்கார தகப்பனுக்கு பிறந்த தினம் இன்று

அந்த மானுடத்தின் வக்கீலுக்கு இன்று பிறந்த நாள். நான் தமிழில் இலக்கண பிழையை தேடிக்கொண்டிருந்த போது , உலகத்தின் பிழைகளை அடிக்கோடிட்டு காட்டிக்கொண்டிருந்தது ஒரு சூரியன் அந்த சூரியனின் சூட்டின் குளிர்க்காய்ந்தவர்களே! போதும் அதோ எங்கள் தாடிக்காற தகப்பனின் தலையனைக்கு குடைப்பிடிக்க தயாராகுங்கள் மனிதனாய் பிறந்தவன் பயணின்று சாககூடாது என்ற அவர் சென்ன வாசகம் நம் இதயத்தில் தீபமாய் எறியட்டும் மூலதனம் எனும் கம்யூனிஸ்டுகளின் பைபிலை பெற்றெடுத்தனேகாதலுக்கு புதிய பாதையமைத்தவனே இன்று முதல் மார்க்ஸிச தீ அத்தனை அடிமை விறகுகளையும் கொளுத்தட்டும் மனிதனாய் பிறந்தவன் பயணின்று சாககூடாது என்ற அவர் சென்ன வாசகம் நம் இதயத்தில் தீபமாய் எறியட்டும் என் வைரமுத்து சொன்னது போல மார்க்ஸையும் மின்சாரத்தையும் ஒதுக்கி விட்டு உயிர் வாழ முடியாது. தொகுப்பு அன்பின் சதாசிவம் சஞ்ஜீவகுமார்

மேலும் வாசிக்க

தாடிக்கார தகப்பனுக்கு பிறந்த தினம் இன்று

அந்த மானுடத்தின் வக்கீலுக்கு இன்று பிறந்த நாள். நான் தமிழில் இலக்கண பிழையை தேடிக்கொண்டிருந்த போது , உலகத்தின் பிழைகளை அடிக்கோடிட்டு காட்டிக்கொண்டிருந்தது ஒரு சூரியன் அந்த சூரியனின் சூட்டின் குளிர்க்காய்ந்தவர்களே! போதும் அதோ எங்கள் தாடிக்காற தகப்பனின் தலையனைக்கு குடைப்பிடிக்க தயாராகுங்கள் மனிதனாய் பிறந்தவன் பயணின்று சாககூடாது என்ற அவர் சென்ன வாசகம் நம் இதயத்தில் தீபமாய் எறியட்டும் மூலதனம் எனும் கம்யூனிஸ்டுகளின் பைபிலை பெற்றெடுத்தனேகாதலுக்கு புதிய பாதையமைத்தவனே இன்று முதல் மார்க்ஸிச தீ அத்தனை அடிமை விறகுகளையும் கொளுத்தட்டும் மனிதனாய் பிறந்தவன் பயணின்று சாககூடாது என்ற அவர் சென்ன வாசகம் நம் இதயத்தில் தீபமாய் எறியட்டும் என் வைரமுத்து சொன்னது போல மார்க்ஸையும் மின்சாரத்தையும் ஒதுக்கி விட்டு உயிர் வாழ முடியாது. தொகுப்பு அன்பின் சதாசிவம் சஞ்ஜீவகுமார்

மேலும் வாசிக்க

மலரும் சார்வரி வருடத்தின் நோக்கம்!

இன்று தமிழ் சிங்கள புதுவருடம் மலர்ந்திருக்கின்றது. கடந்த காலங்களை போல கொண்டாட்டத்தை பற்றிய எண்ணங்கள் நமக்கு மிக குறைவு கொரோனாவில் இருந்து வெளிவர வேண்டும் என்பது அனைவருக்கும் மிக பெரிய எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. கொரோனாவில் இருந்து கட்டாயம் நாம் விடுபடுவோம். ஆனால் அதன் பிறகு மிக பெரிய பொருளாதார சிக்கலை நாங்கள் முகம் கொடுக்க போகின்றோம் என்பது உண்மையே! தலைநகரத்தில் தொழில் புரிந்த அனைவருக்கும் மீண்டும் தொழில் கிடைக்குமா? என்பது உறுதியில்லை. சுற்றுலா துறையில் இருப்பவர்கள் அதிக பிரச்சினைக்கு முகம் கொடுக்க போகின்றார்கள் என்பது நாம் அறிந்தது. இது உதாரணமே. இதை போல் எல்லா துறை தொழிலாளர்கள் முதலாளி என அனைவரும் மிக கஷ்டப்பட்டு முன்னேற வேண்டிய எதிர்காலத்தை எதிர்பாரத்து தான் இந்த புதுவருடம் நமக்கு பிறந்திருக்கின்றது. எனவே இப்பொழுதே நாம் திட்டமிட வேண்டும் கொரோனாவிற்கு பிறகு…

மேலும் வாசிக்க

கலையாழி கலைகளின் மாபெரும் திருவிழா!!

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும் “கலையாழி ” எனும் கலைகளின் மாபெரும் திருவிழா இம்மாதம் 19 ,20 இரு தினங்களிலும் சுவாமி விபுலானந்தா உள்ளக இராசதுரை அரங்கிலும் வெளி வளாகத்திலும் காலை 8மணி தொடக்கம் இரவு 9மணி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது , சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம். நிகழ்வுக்கு முழுமையான இணைய அனுசரணையை மலையகம் .lk வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 57ஆவது சிரார்த்த தினம்..

ஆக்கம் ஆர் .சனத் அடக்குமுறையாலும், வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின்  வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்களையும், சொத்து, பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை இன்றைய நவீன உலகில் சினிமாப்படங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், நிஜவாழ்விலும் இப்படியான மகான்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்கள்  தற்புகழை தேடிச்செல்லாததால் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். அத்தகையவர்களை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவதுதான் பச்சை தங்கத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும். இப்படிதான் மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்று, கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே வாழந்தவர்தான் மலையக காந்தியென போற்றப்படும் கே. இராஜலிங்கம். இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகவும் அன்று இலங்கை, இந்திய…

மேலும் வாசிக்க

முகக்கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை..

முகக்கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக்கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் கமல் ஜயசிஙக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முகக்கவசங்களை விரைவாக தயாரிக்குமாறும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க